NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / டீசல் வாகனங்களுக்கு 10% கூடுதல் வரி? விளக்கமளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!
    டீசல் வாகனங்களுக்கு 10% கூடுதல் வரி? விளக்கமளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!
    ஆட்டோ

    டீசல் வாகனங்களுக்கு 10% கூடுதல் வரி? விளக்கமளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!

    எழுதியவர் Prasanna Venkatesh
    September 12, 2023 | 02:48 pm 1 நிமிட வாசிப்பு
    டீசல் வாகனங்களுக்கு 10% கூடுதல் வரி? விளக்கமளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!
    டீசல் வாகனங்களுக்கு 10% கூடுதல் வரி குறித்து விளக்கமளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

    இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்புக் கூட்டமைப்பின் (SIAM) 63வது வருடாந்திர மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார் மத்தி சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. மாநாட்டில் பேசிய போது, டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு மாசுபாடு வரி என்ற பெயரில் 10% கூடுதல் வரி வசூலிக்கத் திட்டமிட்டு வருவதாக அவர் தெரிவித்திருப்பதாக பல்வேறு செய்தி ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. இந்நிலையில், செய்தி ஊடகங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் 'டீசல் வாகனங்களுக்கான 10% வரி விதிப்பு' என்ற தகவலை தெளிவுபடுத்த வேண்டியிருப்பதாகக் கூறி, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றைப் பகிர்ந்திருக்கிறார் நிதின் கட்கரி.

    விளக்கமளித்த நிதின் கட்கரி: 

    எக்ஸ் தளத்தில் விளக்கமளித்து அவர் பதிவிட்டிருக்கும் பதிவில், "டீசல் வாகனங்களுக்கு மாசுபாடு வரியா 10% கூடுதல் வரி விதிக்கும் திட்டம் எதையும் அரசு தற்போது பரிசீலனை செய்யவில்லை. 2070ம் ஆண்டு ஆண்டிற்குகள் நிகர பூஜ்யம் கார்பன் உமிழ்வைச் சாத்தியப்படுத்தவும், டீசல் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டைத் தடுக்கவும், டீசல் வாகனங்களிலிருந்து சுத்தமான மற்றும் பசுமையான மாற்று எரிபொருள் வாகனங்களின் விற்பனையை அதிகரிப்பது கட்டாயமாகிறது. இந்த மாற்று எரிபொருளானது, விலை குறைவாகவும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாகவும், மாசுபாடற்றதாகவும் இருக்க வேண்டிம்" எனக் குறிப்பிட்டிருக்கிறது அவர். மேலும், டீசலில் இருந்து மாற்று எரிபொருளுகுக் மாறுவது, போக்குவரத்துச் செலவைக் குறைக்கும் எனவும் நிதின் கட்கரி SIAM மாநாட்டில் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    நிதின் கட்கரியின் எக்ஸ் பதிவு:

    There is an urgent need to clarify media reports suggesting an additional 10% GST on the sale of diesel vehicles. It is essential to clarify that there is no such proposal currently under active consideration by the government. In line with our commitments to achieve Carbon Net…

    — Nitin Gadkari (@nitin_gadkari) September 12, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஆட்டோமொபைல்
    நிதின் கட்கரி

    ஆட்டோமொபைல்

    மலிவான எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங்கை வழங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா எலக்ட்ரிக் வாகனங்கள்
    XUV 400 மற்றும் பொலேரோ உள்ளிட்ட கார் மாடல்களுக்கு சலுகைகளை வழங்கும் மஹிந்திரா மஹிந்திரா
    இந்தியாவில் புதிய 'RS 457' பைக்கை அறிமுகப்படுத்திய ஏப்ரிலியா  ப்ரீமியம் பைக்
    எத்தகைய பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கிறது அமெரிக்க அதிபர் பயணம் செய்யும் கார் ஜி20 மாநாடு

    நிதின் கட்கரி

    நாளை அறிமுகமாகிறது இந்தியாவிற்கான வாகன தர நிர்ணயத் திட்டமான 'பாரத் NCAP' ஆட்டோமொபைல்
    கார்களில் ஆறு ஏர்பேக்குகள் கட்டாயமில்லையா? என்ன கூறினார் நிதின் கட்கரி? ஆட்டோமொபைல்
    அடுத்த செய்திக் கட்டுரை

    ஆட்டோ செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Auto Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023