
இந்தியாவில் விற்பனையில் இருக்கும் விலையுயர்ந்த CNG கார் மாடல்கள்!
செய்தி முன்னோட்டம்
மாற்றி எரிபொருளுக்கான தேவை எழுந்த போது உடனடி மாற்றமாக CNG-யை மாற்று எரிபொருளாக பயன்படுத்தும் வகையில் புதிய கார் மாடல்களை வெளியிடத்துவங்கின ஆட்டோமொபைல் நிறுவனங்கள். இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் CNG கார் மாடல்கள் என்னென்ன?
டாடா டிகோர்:
அனைவரும் வாங்கும் வகையிலான விலையில் இருக்கும் CNG கார் மாடல் டாடா டிகோர். நேரடியாக CNG-யிலேயே காரை ஸ்டார்ட் செய்ய முடியும். விலை: ரூ.7.60-ரூ.8.90 லட்சம்.
ஹூண்டாய் ஆரா:
அதிக வசதிகள் கொண்ட இந்த CNG மாடலானது, இதன் பெட்ரோல் வேரியன்டை விட ரூ.95,000 கூடுதல் விலையில் வெளியானது. விலை: ரூ.8.13-ரூ.8.90 லட்சம்.
மாருதி சுஸூகி பெலினோ:
மாருதி நெக்ஸாவின் முதல் CNG மாடல். விலை: ரூ.8.35-ரூ.9.28 லட்சம்.
CNG கார்கள்
மாருதி சுஸூகி டிசையர்:
மிகவும் விலையுயர்ந்த CNG காம்பேக்ட் செடான். அதிக மைலேஜ் தரக்கூடிய CNG மாடலும் கூட. விலை: ரூ.8.39-ரூ9.07 லட்சம்.
டொயோட்டா கிளான்ஸா:
டொயோட்டா வெளியிட்ட பெலினோவின் நகல். டொயோட்டாவில் இருந்து CNG கிட்டுடன் வெளியான முதல் மாடலும் கூட. விலை: ரூ.8.50-ரூ.9.53 லட்சம்.
மாருதி சுஸூகி பிரெஸ்ஸா:
CNG பொருத்தப்பட்ட முதல் காம்பேக்ட் எஸ்யூவி பிரெஸ்ஸா. விலை: ரூ.9.24-ரூ.12 லட்சம்.
மாருதி சுஸூகி எர்டிகா:
ஈகோவுக்குப் பின்னர் CNG எரிபொருள் வசதியுடன் வெளியான மாருதியின் இரண்டாவது எம்பிவி. விலை: ரூ.10.73-ரூ.11.83 லட்சம்.
டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்:
தற்போது விற்பனையில் இருக்கும் விலையுயர்ந்த CNG மாடல். கிராண்டு விட்டாராவின் நகல் இந்த ஹைரடர். விலை: ரூ.13.23-ரூ.15.29 லட்சம்.