உலகின் விலை உயர்ந்த சொகுசு பைக்குகள் - இப்படி ஒரு பிரம்மாண்டமா?
உலகின் விலை உயர்ந்த பைக்குகள் பற்றி தான் இங்கு தெரிந்துகொள்ளப்போகிறோம். ஃபைட்டர் பைக் நெய்மர் மார்கஸ் நிறுவனத்தின் லிமிடெட் எடிஷனாக வெளியான பைக் தான் ஃபைட்டர் பைக். விலை 91 கோடி ரூபாய். இவை, மொத்தம் 45 பைக்குகள் மட்டுமே உள்ளன. இது மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. 1949 E90 AJS Porcupine இந்த பைக் ஆனது 1949ஆம் ஆண்டு வெளியானது. இந்த 500 சிசி மோட்டார் பைக் பந்தயங்களுக்காகவே தயாரிக்கப்பட்டது. மொத்தம் நான்கு பைக்குகள் தான் தயாரிக்கபட்டன. இதன் விலை 58 கோடி ரூபாய். ecosse spirit es1 ஆரஞ்சு நிறத்தில் பக்கா ஸ்போர்ட்ஸ் பைக்காக காட்சியளிக்கும் இந்த பைக்கின் விலை 29 கோடி ரூபாய்.
உலகின் விலை உயர்ந்த பைக்குகளின் லிஸ்ட் இங்கே
ஏரோடைனமிக் வடிவமைப்பு தான் இதன் சிறப்பம்சம். வெறும் 120 கிலோ மட்டுமே எடை கொண்ட இந்த பைக் மணிக்கு 370 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது. Hildebrand & wolfmuller இது 1894 ஆண்டு வெளிவந்த உலகின் முதல் மோட்டார் சைக்கிள். இதன் விலை 28.96 கோடி ரூபாய். இதற்கு கிளட்ச்சோ, பெடலோ இல்லாத சூழலில், இதனை வேகமாக உந்தி தள்ளி தான் பயணத்தை தொடங்க முடியும். BMS NEHMESIS வேடிக்கையாக காட்சியளிக்கும் இந்த பைக் விலை 24.82 கோடி ரூபாய். ஒரு புறம் மட்டுமே இருக்ககூடிய swing arm rear suspension காரணமாக 10 இன்ச் வரைக்கும் பைக்கை தூக்கவும் கீழிறங்கவும் முடியும். இதில் 24 காரட் தங்கத்திலான சில பாகங்களும் உள்ளன.