
Yamaha mt 15 பிரியர்களுக்கு செம்ம அப்டேட்! புதிய வெர்ஷன் அறிமுகம்
செய்தி முன்னோட்டம்
இருசக்கர வாகனத்தில், யமஹா பைக்குகள் எப்போதுமே தனி சிறப்பு வாய்ந்தவை தான். இந்த பைக்கை வாங்க இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுவது உண்டு.
அந்த வகையில், யமஹா எம்டி-15 பைக்குகளுக்கு எதிர்பார்த்ததை காட்டிலும் குறைந்த காலத்தில் அதிக வாடிக்கையாளர்கள் கிடைத்து வருகின்றனர்.
இதனால், யமஹா எம்டி-15 பைக்குகளை யமஹா நிறுவனம் அவ்வப்போது அப்டேட் செய்து விடுகிறது. அதன்படியே 2023ஆம் வருடத்திற்காக அப்டேட் செய்யப்பட்டுள்ள யமஹா எம்டி-15 பைக் டீலர்ஷிப் ஷோரூமை வந்தடைய துவங்கியுள்ளது.
2023ஆம் ஆண்டிற்கான அப்டேட்டாக பைக்கிற்கு புதிய நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த புதிய அப்டேட்களினால் பைக்கின் விலை வழக்கத்தை காட்டிலும் சற்று அதிகமாக நிர்ணயிக்கப்படும் எனக்கூறப்படுகிறது.
2023 Yamaha MT-15
2023 Yamaha MT-15 புதிய வெர்ஷன் - என்ன ஸ்பெஷல்
மேலும், பைக்கின் சக்கரங்கள் இந்த பெயிண்ட் தேர்வில் சிவப்பு நிறத்தில் கிடைக்கும். எம்டி-15 பைக்கிற்கு ஏற்கனவே மெட்டாலிக் கருப்பு, ஐஸ் ஃப்ளோ-வெர்மிலியன், சியான் ஸ்ட்ரோம், ரேசிங் நீலம் மற்றும் மான்ஸ்டர் எனர்ஜி யமஹா மோட்டோஜிபி எடிசன் என்ற 4 விதமான நிறத்தேர்வுகள் வழங்கப்படுகின்றன.
புதிய எம்டி-15 பைக்கிலும் வழக்கமான 155சிசி, லிக்யுடு-கூல்டு, SOHC, 4-வால்வு என்ஜினே தொடரப்பட்டுள்ளது.
6-ஸ்பீடு கான்ஸ்டண்ட் மெஷ் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. யமஹா எம்டி-15 பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது தற்சமயம் ரூ.1,65,390 ஆக உள்ளது
ஆனால் இந்த விலை இன்னும் அதிகரிக்கலாம். . எம்டி-15 பைக் மட்டுமின்றி, ஆர்15 மற்றும் எஃப்.இசட்-எக்ஸ் பைக்குகளையும் யமஹா நிறுவனம் புதிய வருடத்திற்காக அப்டேட் செய்துள்ளது.