ஓலாவுடன் சேர்ந்து முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை உருவாக்கும் ராயல் என்பீல்டு! எப்போது கிடைக்கும்?
ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது தனக்கென சொந்த எலெக்ட்ரிக் வாகன பிரிவை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, அடுத்த 18 முதல் 24 மாதங்களில் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்க ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஓலாவுடன் கைகோர்ப்பு இதற்காக ராயல் என்பீல்டு நிறுவனம் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முன்னாள் மூத்த தொழில்நுட்ப அதிகாரி உமேஷ் கிரிஷ்னப்பாவை நியமித்து இருக்கிறது. எனவே, எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க பிரத்யேக குழு ஒன்று இந்தியா மற்றும் லண்டனில் செயல்பட்டு வருகிறது. எலெக்ட்ரிக் வாகனம் மேலும் இவர்கள் எலெக்ட்ரிக் வாகன துறையில் களமிறங்குவது குறித்த திட்டங்களை வகுத்து வருவதாக கூறப்படுகிறது.
ராயல் என்பீல்டு எலெக்ட்ரிக் வாகனம் எப்போது சந்தைக்கு வரும்?
இதற்காகவே, ராயல் என்பீல்டு நிறுவனம் 100 முதல் 150 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருக்கிறது. இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் சந்தையில் களமிறங்குவதில் இருந்து ஆண்டுக்கு 1.2 லட்சத்தில் இருந்து அதிகபட்சம் 1.8 லட்சம் வாகனங்களை உள்ளடக்கிய வியாபாரம் செய்ய ராயல் என்பீல்டு இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், பல்வேறு நவீன கால தொழில்நுட்ப அம்சங்கள் ராயல் என்பீல்டு எலெக்ட்ரிக் பைக்கில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால், இந்த ஆண்டு இறுதிக்குள் வாகனத்தை தயார்படுத்தி, அடுத்த ஆண்டு சந்தையில் அறிமுகம் செய்ய ராயல் என்பீல்டு திட்டமிட்டுள்ளது.