
'அஸ்டர் ப்ளாக்ஸ்டார்ம்' ஸ்பெஷல் எடிஷன் மாடலை வெளியிட்டிருக்கிறது MG
செய்தி முன்னோட்டம்
தங்களுடைய அஸ்டர் மாடலின் ப்ளாக்ஸ்டார்ம் ஸ்பெஷல் எடிஷன் கார் மாடல் ஒன்றை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது எம்ஜி மோட்டார் நிறுவனம்.
எம்ஜி மோட்டாரின் கிளாஸ்டர் ப்ளாக்ஸ்டார்ம் எடிஷனுக்கு அடுத்தபடியாக, இது அந்நிறுவனத்தின் இரண்டாவது ப்ளாக்ஸ்டார்ம் ஸ்பெஷல் எடிஷன் மாடலாகும்.
டிசைன் வகையில் நிறத்தைத் தவிர வேறெந்த மாற்றமும் இந்த ப்ளகாஸ்டார்ம் ஸ்பெஷல் எடிஷனில் மேற்கொள்ளப்படவில்லை.
வெளிப்புறம், வேறு நிறங்கள் எதுவுமின்றி முழுவதுமாக கருப்பு வண்ணத்தாலேயே அஸ்டரை அலங்கரித்திருக்கிறது எம்ஜி. முன்பக்க பம்பர், ஃபெண்டர்கள் முதல் அனைத்துமே கருப்பு நிறத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது.
வெளிப்புறத்தை ஈடுசெய்யும் வகையில், உட்பக்கமும் கருப்பு நிற தீமிலேயே அனைத்தையும் வடிவமைத்திருக்கிறது எம்ஜி மோட்டார். கூடுதலாக கிளாஸ்டர் ப்ளாக்ஸ்டார்மைப் போலவே ரெட் பிரேக் கேலிப்பர் மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
எம்ஜி மோட்டார்
எம்ஜி அஸ்டர் ப்ளாக்ஸ்டார்ம் எடிஷன்: இன்ஜின் மற்றும் விலை
இந்த அஸ்டர் ப்ளாக்ஸ்டார்ம் எடிஷனில், 110PS பவர் மற்றும் 140Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய, 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினைக் கொடுத்திருக்கிறது எம்ஜி மோட்டார்.
இந்த இன்ஜினுடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு CVT ஆட்டோமேட்டிக் ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகளை வழங்கியிருக்கிறது அந்நிறுவனம்.
இந்தியாவில் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட அஸ்டர் ப்ளாக்ஸ்டார்ம் ஸ்பெஷல் எடிஷன் மாடலை ரூ.14.47 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட அஸ்டர் ப்ளாக்ஸ்டார்ம் ஸ்பெஷல் எடிஷன் மாடலை ரூ.15.76 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும் வெளியிட்டிருக்கிறது எம்ஜி மோட்டார்.