
மணிக்கு 316 கிமீ வேகத்தில் செல்லும் மெர்சிடிஸ் பென்ஸ் AMG சொகுசு கார்!
செய்தி முன்னோட்டம்
பிரபலமான சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் ஆனது இந்தியாவில் தனது 316 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட AMG GT 63 SE காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சொகுசு காரின், அறிமுக விலை ரூ. 3.3 கோடி விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இவை ஓர் பிளக்-இன் ஹைபிரிட் வசதிக் கொண்ட ஆடம்பர காராகும். அதாவது இந்த காரில் ICE மோட்டார் உடன் சேர்த்து எலக்ட்ரிக் மோட்டார் செட் அப்பையும் வழங்கப்பட்டு உள்ளது.
இவை இரண்டுமே காரின் இயக்கத்திற்கு மிகவும் உதவியாக உள்ளது. மின் மோட்டாருக்கு தேவையான மின்சாரத்தை வழங்க தனி பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார்
மெர்சிடிஸ் பென்ஸ் AMG GT63 SE காரின் சிறப்பு அம்சங்கள்
இதற்கு தனியாக பிளக் பாயிண்ட் வழங்கப்பட்டு சார்ஜ் செய்துகொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஓர் முழுமையான சார்ஜில் பெட்ரோல் இல்லாமல் 12 கிமீ பயணம் செய்ய முடிகிறது. அதுவே ஹைபிரிட் தொழில்நுட்பத்தின் வாயிலாக மணிக்கு 130 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும்.
அதிகபட்சமாக மணிக்கு 316 கிமீ வேகத்தை வெறும் 2.9 வினாடிகளில் சென்றும் விடும். இவை 0-100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டவை.
இதுமட்டுமின்றி 12.4 அங்குல இரண்டு திரைகள் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. ஒன்று இன்ஸ்ட்ரூமென்ட் Cluster ஆகவும் மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் Cluster கொடுக்கப்பட்டுள்ளது.
இத்தோடு, AMG டைனமிக் செலக்ட் டிரைவிங் மோட்களும் உள்ளன. 4 விதமான ரைடிங் மோட்களும் கொடுக்கப்பட்டுள்ளன.