NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / ரூ.2 லட்சம் வரை தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படும் மாருதி சுஸூகி ஜிம்னி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரூ.2 லட்சம் வரை தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படும் மாருதி சுஸூகி ஜிம்னி
    ரூ.2 லட்சம் வரை தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படும் மாருதி சுஸூகி ஜிம்னி

    ரூ.2 லட்சம் வரை தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படும் மாருதி சுஸூகி ஜிம்னி

    எழுதியவர் Prasanna Venkatesh
    Dec 02, 2023
    09:58 am

    செய்தி முன்னோட்டம்

    மஹிந்திரா தார் ஆஃப்ரோடு எஸ்யூவிக்குப் போட்டியாக இந்தியாவில் வெளியிட்ட தங்களுடைய ஜிம்னி மாடலின் இந்திய விற்பனையை உயர்த்தும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இந்திய முன்னணி கார் தயாரிப்பாளரான மாருதி சுஸூகி.

    அதன்படி, தீபாவளி பண்டிகையொட்டி ஜிம்னி மாடலின் அடிப்படை வேரியன்டான ஸெட்டா மேனுவல் டிரான்ஸ்மிஷனுக்கு ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி அறிவித்திருந்தது மாருதி.

    ஆனால் இப்போதோ, குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் கூடுதலாக ரூ.1 லட்சம் தள்ளுபடியுடன் சேர்த்து ரூ.12.74 லட்சத்திற்கு பதிலாக, ரூ.10.74 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் புதிய ஜிம்னியை நாம் வாங்க முடியும்.

    ஜிம்னியின் இந்த விலையானது தொடக்க நிலை மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட 4 வீல் டிரைவ் மஹிந்திரா தாரை விட ரூ.4 லட்சம் குறைவு.

    மாருதி

    மாருதி சுஸூகி ஜிம்னி தண்டர் எடிஷன்: 

    தள்ளுபடி விலை மட்டுமல்லாது, புதிய தண்டர் எடிஷன் ஜிம்னி ஒன்றையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது மாருதி சுஸூகி.

    புதிதாக வாங்கும் ஜிம்னி மாடலுடன் தண்டர் எடிஷன் பேக்கேஜை கூடுதல் விலையில் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். மேனுவல் மற்றும் ஆட்டமேட்டிக் வேரியன்ட்களுக்காக தனித்தனி தண்டர் எடிஷன் பேக்கேஜூகளை வெளியிட்டிருக்கிறது மாருதி சுஸூகி.

    இந்த பேக்கேஜில் காஸ்மெடிக் மாற்றங்கள் மட்டுமே முழுவதுமாக இடம்பெற்றிருக்கின்றன. மெக்கானிக்கலாக எந்த மாற்றமும் ஜிம்னி தண்டர் எடிஷனில் செய்யப்படவில்லை.105hp பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினே அனைத்து ஜிம்னியிலும் பயன்படுத்தப்படவிருக்கிறது.

    அனைத்து வேரியன்டகளிலும் ஆல் வீல் டிரைவ் அடிப்படையாகவே கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் கிடைக்கிறது ஜிம்னி.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மாருதி
    எஸ்யூவி
    ஆட்டோமொபைல்
    கார்

    சமீபத்திய

    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து

    மாருதி

    சவால் விட்ட மாருதி ஜிம்னி.. விற்பனையில் தெறிக்க விட்ட மஹிந்திரா தார் - புதிய அப்டேட் மஹிந்திரா
    40 வருட நினைவாக மாருதி சுசுகி செலேரியோ ப்ளாக் எடிஷன் அறிமுகம்! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    2023-இல் வெளியாகும் மாருதி மற்றும் ஹூண்டாய் டாடா கார்கள்! கார் உரிமையாளர்கள்
    வெளியானது மாருதி சுஸூகியின் புதிய FronX எஸ்யூவி.. விலை என்ன?  எஸ்யூவி

    எஸ்யூவி

    13,000 முன்பதிவுகளைப் பெற்று புதிய சாதனை படைத்த கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் கியா
    ஆகஸ்ட்-9ல் வெளியாகவிருக்கும் இரண்டாம் தலைமுறை GLC எஸ்யூவியின் முன்பதிவை தொடங்கியது மெர்சிடீஸ் பென்ஸ்  மெர்சிடீஸ்-பென்ஸ்
    கிராண்டு விட்டாராவில் புதிய பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை வழங்கியிருக்கும் மாருதி சுஸூகி மாருதி
    வரும் மாதங்களில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவிருக்கும் டாடா டாடா மோட்டார்ஸ்

    ஆட்டோமொபைல்

    2024 ஜனவரிக்குள் இந்தியாவில் கால் பதிக்கும் எலான் மஸ்கின் 'டெஸ்லா'? டெஸ்லா
    புதிய எலக்ட்ரிக் டிரக்கை அறிமுகம் செய்தது ராம் நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்கள்
    புதிய 'எலெட்ரெ' மாடல் எலெக்ட்ரிக் காருடன் இந்தியாவில் எண்ட்ரி கொடுத்திருக்கும் லோட்டஸ் எலக்ட்ரிக் கார்
    2023 EICMA நிகழ்வில் அறிமுகமாகியிருக்கும் இந்திய வெளியீட்டிற்கு சாத்தியமுள்ள புதிய பைக்குகள்  பைக்

    கார்

    இந்தியாவில் வெளியானது புதிய சிட்ரன் 'C3 ஏர்கிராஸ்' எஸ்யூவி ஆட்டோமொபைல்
    புதிய ஃபேஸ்லிஃப்டட் ஜீப்புக்கு மாற்றாக இந்தியாவில் விற்பனையாகி வரும் கார்கள் ஃபேஸ்லிஃப்ட்
    கார் ட்ரைவர் வங்கி கணக்கில் ரூ.9,000 கோடி - டிஎம்பி வங்கி விளக்கம்  வங்கிக் கணக்கு
    சுமாரான விற்பனையைத் தொடர்ந்து ஹெக்டர் மாடல்களின் விலையைக் குறைத்த எம்ஜி மோட்டார் எம்ஜி மோட்டார்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025