2023-இல் வெளியாகும் மாருதி மற்றும் ஹூண்டாய் டாடா கார்கள்!
இந்தியாவில் பெரிய கார்களின் வளர்ச்சியை விட சிறிய கார்களின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையில் மொத்த 994,000 யூனிட் கார்கள் விற்பனையாகியுள்ளது. மேலும் இந்த எண்ணிக்கையானது 2023 ஆண்டிலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவில் முதல் மூன்று கார் உற்பத்தியாளர்கள், மாருதி சுசுகி, ஹூண்டாய், மற்று டாடா நிறுவனங்கள் உள்ளது. Maruti Suzuki FRONX மாருதியின் ஃப்ரான்க்ஸ் காரில் 1.0L டர்போ பெட்ரோல் அல்லது 1.2L நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கள் இரண்டும் கிடைக்கும். மேலும், ஸ்மார்ட்போன் கனெக்ட் செய்ய 9 இன்ச் ஸ்மார்ட் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய விற்பனையில் கலக்கிய கார் நிறுவனங்கள்
Hyundai Ai3 ஹூண்டாய் ஏஐ3 கார் 3.8 மீட்டர் நீளம் கொண்டதாக உள்ளது. இந்த மினி காரில் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு தொடு திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில், இது 99 bhp மற்றும் 172 Nm உடன் 1.0L டர்போசார்ஜ் செய்யப்பட்ட 3-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினையும் பெறலாம். 6லட்சம் முதல் 10 லட்சம் வரை கிடைக்கும். Tata Altroz Racer டாடா மோட்டார்ஸ் அல்ட்ராஸ் ரேசர் காரில் CNG கிட் உடன் 1.2 லி பெட்ரோல் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இது 120 பிஎஸ் பவர் 170 என்எம் டார்க்கை வழங்கும். பல தொழில்நுட்ப வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் 10 லட்சம் முதல் கிடைக்கிறது.