
காரில் உறங்க செல்லுமுன் இதை செய்திடுங்க! உயிரை பாதுகாக்கும்
செய்தி முன்னோட்டம்
காரில் உறங்குவதால் பல ஆபத்துக்கள் உண்டாகிறது என்பதற்கு பல சம்பவங்கள் நடந்துள்ளது.
அந்த வகையில் சமீபத்தில் இந்தியாவில் நபர் ஒருவர் காரில் கொசுவர்த்தி ஏற்றி உறங்கும் போது கார் தீ விபத்து ஏற்பட்டு அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.
எனவே, அப்படி காரில் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.
காரில் தூங்க செல்லும் முன் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கார் பயணத்தில் செல்லும் போது கூட சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும்.
ஏனென்றால் விபத்து நேரிடும் பட்சத்தில் உயிர் ஏர் பேக் உங்களை காப்பாற்றும்.
அதேபோல், காரை பார்க்கிங் செய்துவிட்டு உறங்கும் போது கூட சீட் பெல்ட் அணிவது பாதுகாப்பு தான்.
கார் பாதுகாப்பு முறைகள்
காரில் உறங்குவதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?
காரில் உறங்கும் போது காரில் வெளிபுறம் சரியாக லாக் செய்துள்ளீர்களா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
முக்கியமாக, காரில் ஏசியுடன் தூங்கும் போது அதனை சரியான முறையில் உள்ளதா என பரிசோதிக்க வேண்டும்.
மேலும், கார் பார்க்கிங் எந்த ஒரு தொந்தரவும் இல்லாத இடத்தில் நிற்கப்பட்டுள்ளதா என தெரிந்துவிட்டு உறங்க செல்லுங்கள்.
காரின் இன்ஜின் ஆஃப் செய்துவிட்டோமோ, தேவையற்ற மின் சாதனமும் ஆஃப் செய்துவிட்டோமோ என பார்த்துக்கொள்ளுங்கள்.
காரின் ஜன்னல்கள் காற்று வரும்படி வைத்துக்கொள்ளுங்கள். மூச்சுத்திணறல் ஏற்படவும் வாய்ப்பு உண்டாகும். முக்கியமாக காரில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வைக்கவேண்டாம்.
சிகரெட் லைட்டர், துணிகள், எண்ணெய் போன்றவற்றை தவிர்க்கலாம். அடிக்கடி ஏசி கசிவுவை சரிபார்ப்பதும் நல்லது.