கோடைக்காலத்தில் காரை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? குறிப்புகள்
கோடைக்காலம் நெருங்கிவிட்டதால் கொளுத்தும் வெயிலில் இருந்து உங்கள் காரை பாதுகாக்க சில குறிப்புகளை பற்றி பார்ப்போம். கோடைக்காலத்தின் போது உங்கள் காரின் ஏசி அமைப்பை சரிபார்க்க வேண்டும். ஏனென்றால் தவறான ஏசியால் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், எனவே ஏதேனும் கசிவுகள் உள்ளதா என சரிபார்க்கவும். அடித்து, கார்களில் அதிக வெப்பம் காரணமாக டயர்களில் பிரஷர் குறைவாக இருக்கும். காரின் டயர் பிரஷர் ஆனது 30-35-க்குள் இருக்கும்படி வைத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து, காரை வெயிலில் இருந்து பாதுகாக்க பார்க்கிங் இல்லாத இடங்களில் நல்ல தரமான டஸ்ட்-ப்ரூஃப் கவர் வாங்கி மூடிவிடுங்கள். இதனால் உங்கள் கார் தூசி வராமலும், வெயிலின் தாக்கத்தால் பாதிப்படையாமல் இருக்கும்.
கோடை வெயிலில் கார் பாதுகாக்க முக்கிய வழிமுறைகள் இங்கே
இதில் முக்கியமாக காரின் உட்புறத்தில் வெப்பத்தை அகற்ற புதிய வகை சோலார் ஃபேன் சந்தையில் கிடைக்கிறது. இந்த சோலார் மின்விசி காரின் ஜன்னல்களில் நன்றாகப் பொருத்திவிட்டால், கேபினிலிருந்து சூடான காற்றை வெளியேற்றும். குளிர் காலத்தில் காரின் பிரேக் திறன் குறைந்திருக்கும். ஆனால் கோடைக்காலத்தில் காரின் பிரேக்கை செக் செய்து கொள்வது நல்லது. கோடையில் காரின் விண்ட்ஷீல்டு வைப்பர்களையும் கவனிக்க வேண்டும். தூசு அதிகம் படிவதால் டிரைவிங் செய்யும் போது சரியாகச் சாலை தெரியாத அளவிற்கு மோசமாக இருக்கும் இதனால் வைப்பர்களை சரிபார்க்கவும். குறிப்பிட்ட தகவலின் படி காரை வெயிலில் இருந்து காப்பாது உங்கள் செலவை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.