காரை வெயிலில் பார்க் பண்ணா என்ன ஆகும் தெரியுமா?
கோடைக்காலங்களில் காரை வெளியில் நிறுத்துவதால், காரின் வெளிப்புறத்திற்கு மட்டுமல்ல காரின் இன்ஜினிற்கே ஆபத்தை விளைவிக்கும். கார் சூடாகி அதன் பின் பயணிக்கும் போது இன்ஜின் செயல் இழந்து போக கூட வாய்ப்பு இருக்கிறது. காரை வெயிலில் நிறுத்தும்போது நேரடியாகச் சூரிய வெப்பம் உங்கள் கார் மீது விழும். இதனால் முதலில் பாதிக்கப்படுவது உங்கள் காரின் பெயிண்ட் தான். அதன் பொழிவு கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிடும். அடுத்து, காரை பயணித்துவிட்டு, நிறுத்தும்போது, கார் இன்ஜின் ஏற்கனவே சூடாக இருக்கும் பட்சத்தில், கார் வெயிலில் இருப்பதால் தொடர்ந்து சூடு ஏறும். சூடு அதிகமாக இருந்தால் அதில் உள்ள பிஸ்டன் ரிங்க், பெல்ட் ஆகியவை பாதிப்படையும். இதனால் அடிக்கடி பாதியில் நிற்கும் நிலை ஏற்படும்.
காரை நேரடியாக வெயிலில் நிறுத்துவதால் உண்டாகும் பிரச்சினைகள்
பின், நீங்கள் காரை நேரடியாக வெயிலில் பார்க்கச் செய்தால் உங்கள் காரின் ஃப்யூயல் லைனில் கூட பிரச்சனை வரும். இதனால், ரப்பரில் வெப்பத்தில் விரிவடையத் துவங்கினால் காரில் உள்ள கேஸ் லீக் ஆக ஆரம்பித்துவிடும். இது ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வெடித்துப் போகக் கூட வாய்ப்பு இருக்கிறது. நீண்ட நேரம் வெயிலில் நிற்கும்போது, காரின் டயரிலும் பாதிப்பு ஏற்படும். வெயிலின் தாக்கத்தால் வெப்பம் வெகுவாக அதிகரித்து காரின் டயரின் ஆயுளைக் குறைக்கும். இவை எல்லாம் நேரடியாக வெயிலில் காரை நிறுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள். காரை நிழலிலும், அல்லது அதை மூடி வைக்க உறைகளையும் தேர்வு செய்யவேண்டும்.