NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / 2024இல் ஐந்து புதிய எஸ்யூவிகளை களமிறக்க மஹிந்திரா முடிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    2024இல் ஐந்து புதிய எஸ்யூவிகளை களமிறக்க மஹிந்திரா முடிவு
    2024இல் ஐந்து புதிய எஸ்யூவிகளை களமிறக்க மஹிந்திரா முடிவு

    2024இல் ஐந்து புதிய எஸ்யூவிகளை களமிறக்க மஹிந்திரா முடிவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 14, 2023
    06:35 pm

    செய்தி முன்னோட்டம்

    2024 ஆம் ஆண்டில், மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் ஐந்து புதிய எஸ்யூவி மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதில் மூன்று மாடல்கள் ஐசி என்ஜின் மூலம் இயங்கும் கார்களாகவும் மற்றும் இரண்டு எலக்ட்ரிக் கார்களாகவும் களமிறக்கப்பட உள்ளன.

    இதன்படி சிறிய அளவில் மாற்றம் செய்யப்பட்ட XUV300, XUV400, 5-கதவு கொண்ட தார், XUV.e8 மற்றும் பொலீரோ நியோ பிளஸ் ஆகிய கார்கள் வெளியிடப்பட உள்ளன.

    இந்த மாடல்களை களமிறக்குவதன் மூலம் இந்திய வாகன சந்தையில் மஹிந்திராவின் நிலையை உயர்த்தவும் மற்றும் எஸ்யூவிகளுக்கான அதிகரித்து வரும் தேவையை நிவர்த்தி செய்யவும் முடியும் என மஹிந்திரா எதிர்பார்க்கிறது.

    Facelifted XUV 300 and XUV 400 to be launched in 2024 beginning

    மாற்றம் செய்யப்பட XUV300 மற்றும் XUV400 2024

    பிஇ சீரீஸ் மற்றும் XUV700 ஆகியவற்றின் அம்சங்களால் கவரப்பட்டு புதுப்பிக்கப்பட்ட மஹிந்திரா XUV300 வெளிப்புற மற்றும் உட்புற மாற்றங்களுடன் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த காரின் உள்ளே, ஒரு பெரிய தொடுதிரை, ஒரு புதிய டிஜிட்டல் கன்சோல் மற்றும் பல்வேறு மேம்பாடுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

    XUV400 லும் இந்த அம்சங்கள் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில், மஹிந்திரா ஒரு புதுப்பிக்கப்பட்ட XUV400 அடுத்த ஆண்டு வெளியிடப்படும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    XUV400 சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட நெக்சான் எலக்ட்ரிக் காருடனான போட்டியை இலக்காகக் கொண்டு உட்புறத்தை மேம்படுத்தி புதிய அம்சங்களை உள்ளடக்கி இருக்கும் எனத் தெரிகிறது.

    Thar XUV.e8 and Polero Neo Plus to be launched in Dec 2024

    தார், XUV.e8 மற்றும் பொலீரோ நியோ பிளஸ் ஆகியவை 2024 இறுதிக்குள் வெளியிட திட்டம்

    தனித்துவமான வெளிப்புற அம்சங்கள், நீட்டிக்கப்பட்ட வீல்பேஸ் மற்றும் 2.2-லிட்டர் டீசல் அல்லது 2.0-லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆகியவற்றைக் கொண்ட தார் மாடல் காரின் மிகவும் உயர்தர மற்றும் செயல்பாட்டு ஐந்து-கதவு பதிப்பை வெளியிடுவதை மஹிந்திரா நோக்கமாகக் கொண்டுள்ளது.

    மேலும், டிசம்பர் 2024 இல், XUV.e8 எலக்ட்ரிக் எஸ்யூவியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது ஒரு சார்ஜில் 500 கிமீ தூரம் செல்லும் என்று உறுதியளிக்கிறது.

    இறுதியாக, பொலிரோ நியோ பிளஸ், ஸ்கார்பியோ கிளாசிக்கிற்கு கீழே நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஏழு மற்றும் ஒன்பது இருக்கை அமைப்புகளில் இது கிடைக்கும்.

    இது 2.2-லிட்டர் எம்ஹாக் டீசல் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் ஆறு வேக மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மஹிந்திரா
    எஸ்யூவி
    எலக்ட்ரிக் கார்
    கார்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    மஹிந்திரா

    பொலேரோ, பொலேரோ நியோ உள்ளிட்ட வாகனங்களுக்கு மஹிந்திரா வழங்கும் அசத்தலான சலுகைகள் கார்
    20 லட்ச ரூபாய்க்கும் குறைவு: இந்தியாவின் டாப் 5 எம்பிவி கார்களின் பட்டியல் கார்
    கார்களுக்குக்கான மெகா இலவச சர்வீஸ் கேம்ப் - ஆஃபரை வாரி வழங்கிய மஹிந்திரா ஆட்டோமொபைல்
    இனி மஹிந்திரா ஆட்டம் தான் - அடுத்தடுத்து வெளியாகும் புதிய கார்கள் கார் உரிமையாளர்கள்

    எஸ்யூவி

    மஹிந்திரா தார் ஜீப்பை ஸ்டைலாக ஓட்டும் அமிதாப் பச்சன்; வைரலாகும் வீடியோ மஹிந்திரா
    புதிய 'எக்ஸ்டர்' மைக்ரோ எஸ்யூவி மாடலை இந்தியாவில் வெளியிட்டது ஹூண்டாய் ஹூண்டாய்
    மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கிளாஸிக் மாடல் கார்களை வாங்கத் திட்டமிட்டிருக்கும் இந்திய ராணுவம் மஹிந்திரா
    இந்தியாவில் விற்பனையாகி வரும் ஆஃப்-ரோடு எஸ்யூவி மாடல் கார்கள் கார்

    எலக்ட்ரிக் கார்

    தங்களுடைய ப்ரீமியம் எலெக்ட்ரிக் காரான EV9-யும் இந்தியாவிற்குக் கொண்டு வரும் கியா கியா
    இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலை: கார்களின் ஆரம்ப விலை ரூ.20 லட்சம் டெஸ்லா
    இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் காரை வெளியிடும் அமெரிக்காவைச் சேர்ந்த ஃபிஸ்கர் நிறுவனம் அமெரிக்கா
    கிராண்டு விட்டாராவில் புதிய பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை வழங்கியிருக்கும் மாருதி சுஸூகி மாருதி

    கார்

    ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட எஸ்யூவி கார்களை மீண்டும் சோதனை செய்யும் மஹிந்திரா மஹிந்திரா
    600e கிராஸ்ஓவர் எலக்ட்ரிக் காரை 2025இல் களமிறக்க தயாராகி வரும் ஃபியட் எலக்ட்ரிக் கார்
    2045க்குள் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை கொண்ட நிறுவனமாக மாற டாடா மோட்டார்ஸ் இலக்கு டாடா மோட்டார்ஸ்
    இந்தியாவில் ரீபேட்ஜ் செய்யப்பட்ட ரூமியான் எம்பிவியை வெளியிட்டது டொயோட்டா மாருதி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025