சவால் விட்ட மாருதி ஜிம்னி.. விற்பனையில் தெறிக்க விட்ட மஹிந்திரா தார் - புதிய அப்டேட்
பலருக்கும் மஹிந்திரா நிறுவனத்தின் ஜீப் வாகனத்தை வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். குறிப்பாக மலைகள் நிறைந்த பகுதிகளில் வசிப்போருக்கு அல்லது பயணம் செய்பவர்களுக்கு இந்த வாகனம் மீது அதிக ஆர்வம் உண்டு. இதனிடையே, மஹிந்திரா தற்போது புதிய தார் ஜீப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது ஏற்கனவே மஹிந்திரா நிறுவனம் தாரின் 4x2 வெர்சனும் விற்பனைக்கு வந்துள்ளது. புதிதாக தார் வேரியண்ட் 4x4 ட்ரைவ் சிஸ்டத்தை கொண்டு வர உள்ளது. AX மற்றும் LX என இரண்டு வேரியண்ட்களில் 4x4 விற்பனை செய்யப்படுகிறது. இந்த தார் காரில் 2.0 லிட்டர் Turo பெட்ரோல், 2.2 லிட்டர் டீசல் என்ஜின் இடம்பெற்றுள்ளது.
மாருதி ஜிம்னி காருக்கு போட்டியாக மீண்டும் வெளியாகும் மஹிந்திரா தார் 4x4
மஹிந்திரா இந்தியாவில் 13 லட்சத்தில் இருந்து, 16 லட்சம் வரை எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனையாகிறது. மேலும் இதன் டீசல் என்ஜின் மாடல் ஆனது RWD கார்களில் மட்டும் கிடைக்கிறது. இதுவரை இந்த காருக்கு போட்டியில்லாமல் இருந்த நிலையில் முதல் முறையாக Maruti Suzuki Jimny SUV போட்டியாக அமைந்துள்ளது. இந்த காரும் இந்தியாவில் 9.5 லட்சம் ரூபாய் தொடங்கி 13 லட்சம் ரூபாய் வரை எக்ஸ் ஷோரூம் விலையில் கிடைக்கிறது. எவை சிறந்தவை என்னதான் மாருதியின் சிம்னி ஆஃப்-ரோடிங் காராக இருந்தாலும், மஹிந்திரா காருக்கு உள்ள அந்த லுக் மவுசு இதற்கு கிடைக்கவில்லை. அதேப்போல் உற்பத்தியிலும் கூட மஹிந்திரா 2.5 ஆண்டுகளில் 1 லட்சம் யூனிட் விற்பனையாகியுள்ளது.