இனி மஹிந்திரா ஆட்டம் தான் - அடுத்தடுத்து வெளியாகும் புதிய கார்கள்
இந்தியாவில் விற்பனையில் பிரபலமான நிறுவனம் ஒன்று தான் மஹிந்திரா. இந்தியாவைச் சேர்ந்த மஹிந்திரா நிறுவனம் தற்போது எலக்ட்ரிக் கார்கள் சந்தையில் வலுவாக கால்பதிக்கும் திட்டத்தில் மஹிந்திரா உள்ளது. இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து மஹிந்திரா நிறுவனம் என்னென்ன புதிய கார்களை வெளியிடுகிறது என்பதை பார்ப்போம். Bolero Neo Plus இதற்கு முன் விற்பனையில் ஜொலிக்காத டியூவி300 காரின் அப்டேட் வெர்சனாக இந்த பொலேரோ நியோ காரை மஹிந்திரா அறிமுகப்படுத்தியது. புதிய 9 இருக்கை வெர்சனாக பொலேரோ நியோ ப்ளஸ் காரை களமிறக்கும் திட்டத்தில் மஹிந்திரா உள்ளது. Mahindra Thar Off-Road மஹிந்திராவின் பிரபலமான காரில் ஒன்று தான் இந்த தார் ஆஃப் ரோடு. குடும்பமாக பயணிக்க 5-கதவு தார் வாகனம் தயாராகி வருகிறது.
மஹிந்திராவின் புதிய கார்கள் அடுத்தடுத்து வருகிறது - அம்சங்கள் என்ன?
புதிய தலைமுறை பொலேரோ ஒவ்வொரு மாதத்திலும் மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து இந்திய சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்படும் பயணிகள் கார் பொலேரோ தான். இந்த காரை மஹிந்திரா அப்டேட் செய்து பல வருடங்களாகி விட்டது. 2024 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. Mahindra XUV700 Electric ஹிந்திரா விற்பனை செய்வதிலேயே விலை உயர்ந்த காராக விளங்கும் எக்ஸ்யூவி700 தான். 2024 முடிவதற்குள் எலக்ட்ரிக் வெர்சனில் அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, மஹிந்திரா ஏற்கனவே வெளியீடு செய்துவிட்ட எக்ஸ்யூவி இ8 கான்செப்ட்டின் அடிப்படையில் இந்த எலக்ட்ரிக் கார் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.