கார்களுக்குக்கான மெகா இலவச சர்வீஸ் கேம்ப் - ஆஃபரை வாரி வழங்கிய மஹிந்திரா
பிரபல முன்னணி கார் நிறுவனமான மஹிந்திரா நாடு தழுவிய மெகா சர்வீஸ் கேம்ப்-ஐ இன்று (பிப்16) முதல் தொடங்கி இருக்கிறது. இந்த கேம்ப் குறிப்பிட்ட நாட்கள் வரை மட்டுமே நடைபெற உள்ளதாகவும், இந்த சர்வீஸ் கேம்பில் சில சேவைகள் இலவசமாகவும், சில சேவைகள் குறைந்த கட்டணத்திலும் மேற்கொள்ளப்படும் என அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுமட்டுமின்றி, ஆயில் மாற்றங்களுக்கு 5 சதவீதம் வரையிலும், மெக்கானிக் சர்வீஸ் சார்ஜிற்கு 10 சதவீதம் வரை சலுகை வழங்க இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பிரத்யேக ஆஃப்ராக 'மேக்ஸி கேர்' எனும் வெளிப்புற பாடியில் செய்யப்படும் அழகு வேலையையும் கூட 25 சதவீதம் சலுகை கட்டணத்தில் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது.
கார்களுக்கான மெகா சர்வீஸ் ஆஃபரை வழங்கும் மஹிந்திரா நிறுவனம்
இந்த சிறப்பு சர்வீஸ் கேம்ப் இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் உள்ள மஹிந்திரா சர்வீஸ் மையங்களில் நடைபெற்றுக் கொண்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தின்கீழ் உங்களது கார்களை சர்வீஸ் செய்ய விரும்பினால் உடனடியாக இதற்கான அப்பாயின்மென்டை இப்போதே பெறுவதே நல்லது. நிறுவனம் முன்கூட்டியே நியமனம் பெறும் வாடிக்கையாளர்களுக்கே முன்னுரிமை வழங்க இருக்கின்றது. இந்த மெகா சர்வீஸ் கேம்ப் இன்று (16 பிப்ரவரி) தொடங்கி இம்மாதம் 26 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த சர்வீஸில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃப்ரீ சர்வீஸ்கள், 75 பாயிண்டுகள் இலவச செக்-அப், பெரும் தொகை டிஸ்கவுண்ட் மற்றும் சிறப்பு பரிசுகள் உள்ளிட்டவையும் வழங்கப்பட இருக்கின்றன.