
பொலேரோ, பொலேரோ நியோ உள்ளிட்ட வாகனங்களுக்கு மஹிந்திரா வழங்கும் அசத்தலான சலுகைகள்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் முன்னணியில் இருக்கும், இந்தியாவின் வாகன தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா, இந்த பிரவரி மாதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பல மாடல்களில் சலுகைகளை அறிவித்துள்ளது.
தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ள மாடல்களில் பொலிரோ, பொலேரோ நியோ, மராஸ்ஸோ மற்றும் எக்ஸ்யூவி300 ஆகியவை அடங்கும். அவை ரூ.70,000 வரையிலான வரை சலுகைகளுடன், தள்ளுபடியில் விலையில் கிடைக்கின்றன.
ஆனால், XUV400 EV, ஸ்கார்பியோ கிளாசிக், ஸ்கார்பியோ-N, Thar மற்றும் XUV700 ஆகிய மாடல்களில் எந்த விதமான சலுகைகள் அல்லது தள்ளுபடிகளும் அறிவிக்கப்படவில்லை.
இந்த சலுகைகள் வாகன விற்பத்தியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தள்ளுபடி விற்பனை
மஹிந்திரா வாகனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளின் விவரங்கள்
மஹிந்திரா XUV300யின் ஆரம்ப விலை ரூ. 8.41 லட்சம் ஆகும். இந்த மாடலுக்கு ரூ. 36,500 வரை தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன.
மஹிந்திரா பொலேரோவின் தொடக்க விலை ரூ. 9.48 லட்சம் ஆகும், இந்த மாதம் இந்த மாடலுக்கு ரூ.59,000 சலுகை வழங்கப்பட்டுள்ளது.
ரூ. 9.48 லட்சம் என்ற ஆரம்ப விலையில் கிடைக்கும் மஹிந்திரா பொலேரோவுக்கு 70 ஆயிரம் ரூபாய் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத சலுகை வழங்கப்பட்டிருக்கும் மஹிந்திரா வாகனங்களில் அதிக விலையில் சந்தையில் விற்பனையாகும் மாடல் மஹிந்திரா மராசோ. இதன் ஆரம்ப விலை 13 லட்சம் மற்றும் 37 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.