ரூ.13 லட்சம் மதிப்பிலான மஹிந்திராவின் தார் ராக்ஸ் கார் ரூ.1.31 கோடிக்கு ஏலம்
செய்தி முன்னோட்டம்
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய அறிமுகமான தார் ராக்ஸ் (Thar Roxx) சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கு காரணம் நிறுவனம் சமீபத்தில் தார் ராக்ஸ் மாடலின் முதல் காரமான VIN 0001 ஐ ஏலம் விடுவதாக அறிவித்ததுதான்.
இந்நிலையில், இந்த எஸ்யூவி கார் தற்போது ரூ.1.31 கோடிக்கு ஏலம் போயுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிதி முழுவதும் தொண்டு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என நிறுவனம் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ராக்ஸின் VIN 0001 ஆனது ஒரு டாப்-ஸ்பெக் AX7 L டீசல் 4x4 டிரிம் ஆகும். மேலும் இது ஆனந்த் மஹிந்திராவின் கையொப்பத்துடன் VIN 0001 லட்சினையையும் பெறுகிறது.
ஆரம்ப விலை
தார் ராக்ஸ் காரின் ஆரம்ப விலை
தார் ராக்ஸ் இந்தியாவில் ரூ.12.99 லட்சம் ஆரம்ப விலையில் (எக்ஸ்-ஷோரூம்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவி காருக்கான முன்பதிவு அக்டோபரில் தொடங்கும்.
டெலிவரி தசரா முதல் தொடங்கும். மேலும், மஹிந்திரா அடுத்த மாதம் முதல் வாகனத்தின் டெஸ்ட் டிரைவ்களை வழங்கத் தொடங்கும்.
தற்போது, 4x4 டிரைவ்டிரெய்ன் டீசல் பவர்டிரெய்னுக்கு மட்டுமே கிடைக்கிறது.
2.0 லிட்டர் TGDi பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் mHawk டீசல் என்ஜின் என இரண்டு என்ஜின் தேர்வுகளுடன் தார் ராக்ஸ் விற்பனைக்கு வருகிறது.
டீசல் என்ஜின் மேனுவல் அல்லது தானியங்கி மற்றும் நிச்சயமாக 4x4 ஆக இருக்கும்.
மறுபுறம், பெட்ரோல் என்ஜின் 4x4 டிரைவ்டிரெய்னுடன் வராது. ஆனால் மேனுவல் மற்றும் தானியங்கி பரிமாற்ற தேர்வுகளை வழங்குகிறது.