இந்தியாவின் இரண்டாவது பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸை விஞ்சியது மஹிந்திரா
செய்தி முன்னோட்டம்
இந்திய வாகனத் துறையில் முன்னணி நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா(எம்&எம்), சந்தை மூலதனத்தின் அடிப்படையில் நாட்டின் இரண்டாவது பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.
இந்த மாற்றத்தை BSE வழங்கிய தரவுகளும் உறுதிப்படுத்தி உள்ளன.
தற்போது மஹிந்திரா & மஹிந்திராவின் சந்தை மூலதனம் ரூ.3,63,980.89 கோடியை எட்டியுள்ளது.
நேற்று தான், மஹிந்திரா & மஹிந்திராவின் சந்தை மதிப்பில் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
அதன் அதிகப் பங்கு விலையான ரூ.2,946 ஐ அடைந்த மஹிந்திரா & மஹிந்திரா, சென்செக்ஸில் நேற்று அதிக லாபம் ஈட்டியது.
இந்தியா
மஹிந்திராவின் லட்சிய விரிவாக்கத் திட்டங்கள்
மஹிந்திராவின் பங்குகளில் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 70% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸின் பங்குகள் 25% உயர்ந்தன.
மஹிந்திரா நிறுவனம் தனது சந்தை மதிப்பின் மூலம் தற்போது இந்தியாவில் இரண்டாவது மிக மதிப்புமிக்க வாகன உற்பத்தியாளராக உள்ளது. முதல் இடத்தில் மாருதி சுஸுகி உள்ளது.
மஹிந்திராவின் சந்தை மூலதனம் ரூ.3,63,980.89 கோடியாகும். மாருதி சுஸுகியின் ரூ.4,03,240.17 கோடியாக உள்ளது.
மஹிந்திரா உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் லட்சிய விரிவாக்கத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள் ஆறு புதிய SUVகள் மற்றும் மொத்தம் 23 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.