இந்த மாதம் பிப்ரவரியில் வெளியாகும் அசத்தலான கார்கள் என்னென்ன?
2023 ஆம் ஆண்டில் இந்திய வாகனத்துறையில் பல விதமான பிரம்மாண்ட கார்கள் களமிறங்கியுள்ள்து. அதிலும், பிப்ரவரி மாதத்தில் கார்கள் தயாரிப்பாளர்களிடம் இருந்து பல மாடல்கள் அறிமுகம் செய்ய உள்ளன. அந்த வகையில், Tata Motors, Citroen , Toyota, Audi மற்றும் Lexus போன்ற பல வாகன உற்பத்தியாளர்கள் இந்த மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்கின்றனர். சிட்ரோயன் ஈசி3 சிட்ரோயன் ஈவி கார் மலிவான விலையில் வருகிறது. இது 10-இன்ச் டச்ஸ்க்ரீன் சி3 ஹேட்ச்பேக்கை அடிப்படையாகக் கொண்டது. மேலும் ஈவி ஆனது 29.2கிலோவாட் பேட்டரி பேக் மற்றும் 57பீஎஸ்/143என்.எம் மின்சார மோட்டார் மூலம் 320கீமீ க்ளைம் வரம்புடன் வரும்.
பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் சூப்பரான அம்சங்கள் கொண்ட கார்கள்
Tata Altroz Racer இந்த டாடா அல்ட்ரோஸ் ரேசர், காஸ்மெட்டிக், அம்சங்களின் மேம்பாடுகள் மற்றும் நெக்ஸான் இன் 120பீஎஸ், 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது. 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் (118hp/170Nm) மூலம் இயக்கப்படுகிறது. டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா Toyota Innova Crysta மாடலுக்கு முன்பதிவுகள் இப்போது திறக்கப்பட்டுள்ளன. இது புதுப்பிக்கப்பட்ட முன்பக்க ஃபேசியா மூலம் மற்ற மாடல்களிடம் இருந்து வேறுபடுகிறது. இவை, ரியர்-வீல் டிரைவ் டிரெய்ன் (ஆர்டபிள்யூடி) மற்றும் லேடர்-ஆன்-ஃபிரேம் கட்டுமானம் உட்பட ஓ.ஜி இன்னோவாவின் அனைத்து குணங்களையும் தக்க வைத்துக் கொள்ளும். மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் டீசலில் மட்டுமே இயங்கும்.