Koenigsegg Regera: ஓபன்ஏஐ -இன் நிறுவனர் சாம் அல்ட்மன்-இன் புதிய காரை பார்த்துள்ளீர்களா?
செய்தி முன்னோட்டம்
ஓபன்ஏஐ-இன் நிறுவனர் சாம் அல்ட்மன் சமீபத்தில் ஒரு சூப்பர் கார் ஒன்றை ஒட்டி சென்ற வீடியோ வைரலானது.
பலரும் அது என்ன கார் என பலரும் யோசித்த நிலையில் தற்போது அதை பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.
அந்த ஆடம்பர சூப்பர் காரின் பெயர் கோனிக்செக் ரெஜெரா.
இந்திய பணமதிப்பின் படி, இந்த காரின் விலை 30 கோடி.
இது ஸ்வீடன் நாட்டில் தயாரிக்கப்படுவது.
இந்த ஹைபிரிட் வகை கார் பிஎம்டபிள்யூ i8 க்கு போட்டியாக வெளியிடப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Koenigsegg Regera
Sam Altman, CEO of OpenAi in his Koenigsegg Regera. pic.twitter.com/6DJx58mw1x
— ₕₐₘₚₜₒₙ — e/acc (@Hamptonism) July 9, 2024
கார் விவரங்கள்
மின்சார மோட்டார், 1100 ஹெச்பி @ 7800 ஆர்பிஎம் கொண்ட சூப்பர் கார்
Koenigsegg Regera ஹைப்ரிட் பிரீமியம் சூப்பர் கார் பிரிவில், ஹைப்ரிட் எஞ்சினுடன் வெளியாகியுள்ளது.
இந்த கார் 5.0 எல் வி8 இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.
இது மின்சார மோட்டாருடன் அதிகபட்சமாக 1100 ஹெச்பி @ 7800 ஆர்பிஎம் ஆற்றலை உருவாக்குகிறது.
மேலும் மின்சார மோட்டாரில் 697 பிஎச்பி கூடுதல் ஆற்றலை உருவாக்குகிறது.
இது 4100 ஆர்பிஎம்மில் அதிகபட்சமாக 1280 என்எம் முறுக்குவிசையையும், எலக்ட்ரிக் டிரைவில் கூடுதலாக 820 என்எம் டார்க்கையும் உருவாக்குகிறது.
இது 150 லிட்டர் பூட் ஸ்பேஸ் மற்றும் 82 லிட்டர் எரிபொருள் டேங்கில் இயங்குகிறது.