Page Loader
கியா கார்னிவல் காரில் உண்டான பிரச்சினை -  51,568 கார்களை திரும்ப பெறுகிறது!
கியா கார்னிவல் காரின் கதவில் ஏற்படும் ஆபத்தால் 51,568 கார்களை திரும்ப பெற அழைத்துள்ளது

கியா கார்னிவல் காரில் உண்டான பிரச்சினை - 51,568 கார்களை திரும்ப பெறுகிறது!

எழுதியவர் Siranjeevi
Apr 08, 2023
05:56 pm

செய்தி முன்னோட்டம்

பிரபலமான கார் நிறுவனமான கியா மோட்டார்ஸ் ஆனது அமெரிக்காவில் 51,568 கார்னிவல் கார்களை திரும்பப் பெறுவதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளது. இந்த கார்கள் 2022 மற்றும் 2023 ஆம் வெளியிடப்பட்டவை. காரின் கதவுகள் ஆட்டோ ரிவர்சிங் செயல்பாடு கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த செயல்பட்டால் இது வரை ஒன்பது வாடிக்கையாளர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கு கட்டைவிரல் முறிவு, கை உடைப்பு போன்றவகளை சந்தித்துள்ளனர். இதனால் ஆபத்துக்கள் இருப்பதாக புகார் எழுந்தது. இதனால் கியா நிறுவனம் கார்களை திரும்ப பெற்று சரி செய்ய அழைப்பு விடுத்துள்ளது. கதவுகள் மூடும் வேகத்தைக் குறைக்கும் மென்பொருள் சரிசெய்து தரவும், மேலும் கார் கதவு மூடப்படும் போது இரண்டு எச்சரிக்கை மணிகளை அடிக்கவும் மாற்றி தருவதாக தெரிவித்துள்ளது.

கியா கார் நிறுவனம்

கியா கார்னிவல் காரின் கதவில் ஏற்படும் விபத்தால் சரிசெய்து தர அழைப்பு விடுத்துள்ளது

எனவே 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டின் பிப்ரவரி 22 வரை விற்கப்பட்ட அனைத்து கார்களையும் ரீகாலுக்கு அழைத்துள்ளது. ஏப்ரல் 28 முதல் கார் உரிமையாளர்களுக்கு நினைவூட்டலை வழங்க தொடங்கும். மேலும் திரும்பப் பெறுதல் மற்றும் புதுப்பித்தல் செயல்முறை இலவசமாக செய்யப்படும். சம்பந்தப்பட்ட அனைத்து கார்னிவல் உரிமையாளர்களும் தங்களுக்கு அருகிலுள்ள டீலர்ஷிப்களுக்குச் சென்று தங்கள் வாகனங்களை ஆய்வு செய்துகொள்ளலாம். அமெரிக்காவில் இந்த கார் விலை 34 லட்சமாகும். அதுவே இந்தியாவில் ரூ. 30.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.