
இந்தியன் ஆயில் ஃபார்முலா ஒன் எரிபொருள் தயாரிப்பில் இறங்குகிறது
செய்தி முன்னோட்டம்
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்(IOCL), ஃபார்முலா ஒன் ரேஸ் கார்களுக்கான எரிபொருளை தயாரிக்கும் திட்டத்தை வெளியிட்டுள்ளது.
ஒடிசாவில் உள்ள அதிநவீன பரதீப் சுத்திகரிப்பு நிலையம் இந்த உற்பத்திக்காக நியமிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மூன்று மாதங்களுக்குள், சிறப்பு எரிபொருள் ஒழுங்குமுறை அமைப்புகளிடமிருந்து இதற்கான சான்றிதழை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வளர்ச்சி உயர் தொழில்நுட்ப எரிபொருள் உற்பத்தியில் இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் உலகளாவிய மோட்டார்ஸ்போர்ட் தொழில்களில் அதன் விரிவாக்க பங்கைக் குறிக்கிறது.
இந்தியன் ஆயில், எஃப்ஐஎம் ஆசியா ரோடு ரேசிங் சாம்பியன்ஷிப்பிற்கான, அதிகாரப்பூர்வ எரிபொருள் கூட்டாளியாக, டூ வீல்ஸ் மோட்டார் ரேசிங்குடன் கூட்டு சேர்ந்துள்ளது.
புதுமையான எரிபொருள் தீர்வுகள் மூலம், உயர் செயல்திறன் கொண்ட மோட்டார் ஸ்போர்ட்களை ஆதரிப்பதில் IOCLஇன் உறுதிப்பாட்டை, இந்த ஒத்துழைப்பு அடிக்கோடிட்டுக்காட்டுகிறது.
இந்தியன் ஆயில்
ஃபார்முலா ஒன் எரிபொருள்
2024 முதல் 2026 வரையிலான இந்த மூன்று ஆண்டு கூட்டணியில், அனைத்து சாம்பியன்ஷிப் சுற்றுகளிலும் (மார்ச் மற்றும் டிசம்பர் வரையிலான ஆறு நிகழ்வுகள்),'STORM-Ultimate Racing Fuel' இந்தியன் ஆயில் வழங்கும்.
இந்தியன் ஆயில் தயாரிக்கும் 'STORM-Ultimate Racing Fuel,' Formula One பந்தயத்துடன் தொடர்புடைய சோதனை வசதியான சுவிட்சர்லாந்தில் உள்ள M/s Intertekஆல் அங்கீகரிக்கப்பட்டது.
இந்த எரிபொருள், இயந்திர செயல்திறனை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.
விரைவான முடுக்கம் மற்றும் அதிகரித்த ஆற்றல் வெளியீடு போன்ற நன்மைகளை வழங்குகிறது.
இது என்ஜின் டெபாசிட்கள் மற்றும் வெளியேற்ற உமிழ்வைக் குறைப்பதன் மூலம் என்ஜின் ஆயுட்காலம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையையும் ஊக்குவிக்கிறது.
'STORM' அறிமுகமானது, சிறப்பு எரிபொருள் உற்பத்தியில் இந்தியன் ஆயிலுக்கு ஒரு குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப சாதனையைக் குறிக்கிறது.