இந்தியாவின் ஆமை வேக ரயில் இதுதான்! 46 கிமீ பயணிக்க 5 மணிநேரம்
இந்தியாவில், மேட்டுப்பாளையம் ஊட்டி நீலகிரி பயணிகளுக்கு நாட்டிலேயே மிக மெதுவான ரயிலை இயக்கி வருகின்றனர். இந்த இரயில், 46 கி.மீ பயணிக்க 5 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. ஆனால் இந்த ரயிலில் பயணம் செய்ய மிகவும் அற்புதமாக இருக்கும் எனக்கூறப்படுகிறது. நூற்றாண்டு காலமாக இயக்கப்பட்டு வரும் இந்த மலை ரயிலை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவிப்பதற்கான முயற்சியை, தெற்கு ரயில்வே மற்றும் டெல்லியில் உள்ள ரயில்வே அருங்காட்சியகம் மற்றும் ரயில்வே வாரியம் ஆகியவை மேற்கொண்டன. 114 ஆண்டுகள் பழைமையான நீலகிரி மலை ரயில் முதன்முறையாக 1899-ஆம் ஆண்டு மேட்டுப்பாளையம், குன்னூர் இடையே இயக்கப்பட்டது. இப்போதும் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை நீராவி எஞ்ஜின்கள் மூலமே ரயில் இயக்கப்படுகிறது.
ஊட்டி மேட்டுப்பாளையம் நீலகிரி சுற்றுலாபயணிகளின் ஆமை வேக ரயிலின் சுவாரசியம்
எனவே, நீலகிரி மலை ரயில் 11.516 மீட்டர் நீளமும், 2.15 மீட்டர் அகலமும், 4 பெட்டிகளையும் கொண்டுள்ளது. நீலகிரி மலை ரயில், மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி இடையிலான 46 கிமீ தூரம் செல்ல, 208 வளைவுகள், 250 பாலங்கள் மற்றும் 16 சுரங்கப் பாதைகளையும் கடக்க வேண்டியுள்ளது. மேலும், இந்த ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7:10 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் ஊட்டியை சென்றடைகிறது. மாலை 5:35 மணிக்கு மீண்டும் மேட்டுப்பாளையத்திற்கு வருகிறது. இந்த பயணத்தின் போது, 46 கிமீ பயணத்தில் பல சுரங்கங்கள் மற்றும் 100 பாலங்கள் வழியாக செல்கிறது. பாறைகள் நிறைந்த நிலப்பரப்பு, பள்ளத்தாக்குகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் அடர்ந்த காடுகள் நிறைந்த மலைகள் ஆகியவை சவாரியை அழகாக்குகின்றன.