இனி வாட்ஸ்அப் மூலம் இரயிலில் உணவு ஆர்டர் செய்யலாம்! எப்படி தெரியுமா?
வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதியை ரயில்வே துறை பயணிகளுக்கு தற்போது வழங்கியுள்ளது. பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே அவ்வப்போது பல புதிய சேவைகள் தொடங்கியுள்ளது. அதன்படி, கடந்த சில ஆண்டுகளில், உணவுப் பொருட்களின் சுகாதாரத்தை மேம்படுத்தவும், பயணிகளுக்கு எளிதாக உணவு கிடைப்பதற்கும் ரயில்வே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்த வகையில் வாட்ஸ்அப் உணவு ஆர்டர் செய்வதையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இ-கேட்டரிங் சேவை வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ரயில்வேயால் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. அதேப்போல், உணவு ஆர்டர் செய்ய ரயில்வேயில் வாட்ஸ்அப் எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் எண் +91-8750001323 பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இரண்டு வழியில் ஆர்டர் செய்யலாம்.,
ரயில் பயணிகளுக்கான புதிய சேவை - வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்வது எப்படி?
முதல் கட்டமாக, www.ecatering.irctc.co.in என்ற இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் இ-டிக்கெட்டை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளருக்கு இ-கேட்டரிங் சேவையைத் தேர்ந்தெடுத்து புக் செய்யலாம். அடுத்து, வாட்ஸ்அப் எண் மூலம் ஆர்டர் செய்யலாம். அதாவது, இருவழி தொடர்பு தளமாக மாறும். இதில், AI பவர் சாட்போட் பயணிகளின் இ-கேட்டரிங் சேவை தொடர்பான அனைத்து வகையான கேள்விகளையும் எடுக்கும் மற்றும் பயணிகளுக்கான உணவையும் முன்பதிவு செய்யும். இவை சில ரயில்களில் மட்டும் வாட்ஸ்அப் தொடர்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்பின்னர், பின்னர், வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில் மற்ற ரயில்களிலும் வாட்ஸ்அப் தொடர்பு முறை அமல்படுத்தப்படும்.