இது கார் இல்லை வீடா? ஹூண்டாய் வெர்னா காரின் சிறப்புகள்!
பிரபல கார் நிறுவனமான ஹூண்டாய் தனது வெர்னா என்ற செடான் காரை அப்டேட் செய்து வரும் மார்ச் 21ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இந்த காரில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற உள்ளது. அதன்படி, அந்நிறுவனம் இந்த காரில் உட்புற கட்டமைப்பு மற்றும் வசதிகள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. முதன் முறையாக ஸ்விட்சபிள் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் ஆகியன உள்ளன. இது எல்லாத்தையும் விட முக்கியமான இந்த ஹூண்டாய் வெர்னா காரில் 8 ஸ்பீக்கர் கொண்ட போஸ் சவுண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த ஹூண்டாய் காரின் வெளிப்புறத்தில் பானட் பகுதியில் எல்இடி லைட் பார் பொருத்தப்பட்டுள்ளது.
ஹூண்டாய் வெர்னா காரில் கொடுக்கப்பட்ட அம்சங்கள் என்னென்ன?
முன்பக்க கிரில், ஹாரிசான் எல்இடி போசிஷனிங் லேம்ப்கள் டிஆர்எல்கள், எல்இடி டெயில் இந்த காரில் இடம் பெற்றுள்ளன. இது போக இந்த காரில் பழைய காரை விட அதிகமான பூட் ஸ்பேஸ் பகுதியும் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை டீசல் இன்ஜின் ஆப்ஷன் இல்லை மாறாக 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. வெளியீட்டு, நேரத்தில் இதே இன்ஜினில் டர்போ சார்ஜ்டு வேரியன்ட் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த இன்ஜின் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது. புதிய வெர்னா கார் மாருதி சுஸூகி சியாஸ், ஸ்கோடா ஸ்லாவியா, ஃபோக்ஸ்வேகன் விர்டூஸ் மற்றும் ஹோண்டா சிட்டி ஆகிய கார்களுக்கு போட்டியாக களம் இறங்குகிறது.