Page Loader
புதிய சார்ஜிங் அமைப்புகள்.. ஷெல் இந்தியாவுடன் கைகோர்த்த ஹூண்டாய்!
ஷெல் இந்தியாவுடன் கைகோர்த்த ஹூண்டாய்

புதிய சார்ஜிங் அமைப்புகள்.. ஷெல் இந்தியாவுடன் கைகோர்த்த ஹூண்டாய்!

எழுதியவர் Prasanna Venkatesh
May 17, 2023
02:20 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா முழுவதும் உள்ள தங்களின் 36 டீலர்ஷிப்களில் 60kW ஃபாஸ்ட் சார்ஜர்களை அமைப்பதற்காக ஷெல் இந்தியா நிறுவனத்துடன் கைகோர்த்திருக்கிறது ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம். இந்த திட்டம் தொடர்பாக இரு நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பதமும் இன்று கையெழுத்தாகியிருப்பதாக தாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது ஹூண்டாய். மேலும், இந்தியாவில் பேட்டரி எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் கட்டமைப்பை விரிவாக்கம் செய்யவும் இந்தப் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது. இந்தியாவின் கார்பன் நடுநிலை இலக்கை அடையவும், வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் வானங்களுக்கு மாறுவதை ஊக்குவிக்கவும் இந்த மாதிரியான ஒப்பந்தங்கள் முக்கியமானவை எனத் தெரிவித்திருக்கிறார் ஹூண்டாயின் சிஇஓ அன்சூ கிம். இந்தியாவின் 45 நகரங்களில் 75 டீலர்ஷிப்களை ஹூண்டாய் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Embed

Twitter Post

Hyundai ties up with Shell to install fast chargers at 36 dealerships#Hyundai #Shell #ElectricVehicles #FastCharging https://t.co/oZCTqvPVUA— NewsDrum (@thenewsdrum) May 17, 2023