Page Loader
மே 2024 கார் விற்பனையில் 1% ஆண்டு வளர்ச்சியைப் பதிவு செய்தது ஹூண்டாய் 

மே 2024 கார் விற்பனையில் 1% ஆண்டு வளர்ச்சியைப் பதிவு செய்தது ஹூண்டாய் 

எழுதியவர் Sindhuja SM
Jun 16, 2024
05:00 pm

செய்தி முன்னோட்டம்

மே 2024இல் மொத்தம் 49,151 யூனிட் கார்களை விற்பனை செய்துள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு மே மாதம் பதிவு செய்யப்பட்டதை விட 1% அதிகமாகும். 2023ஆம் ஆண்டு மே மாதம் ஹூண்டாய் நிறுவனம் 48,601 யூனிட்களை விற்பனை செய்ததது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஹூண்டாய் நிறுவனம் 50,201 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. ஏப்ரல் 2024 உடன் ஒப்பிடும்போது இந்த மே மாத விற்பனையில் 2% சரிவு ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சிறிய ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், ஒட்டுமொத்த உள்நாட்டு விற்பனையில் ஹூண்டாய் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஹூண்டாய்

ஹூண்டாயின் அதிகம் விற்பனையாகும் மாடலாக உருவெடுத்தது க்ரெட்டா 

ஹூண்டாய் நிறுவனத்தின் சிறந்த செயல்திறன் மிக்க மாடலான க்ரெட்டா மே 2024 இல் 14,662 யூனிட்களை விற்று முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் க்ரெட்டா மாடல் 14,449 யூனிட்கள் விற்பனையானது. எனவே,மே 2023 உடன் ஒப்பிடும் போது இது ஆண்டுக்கு ஆண்டு 1% வளர்ச்சியைக் குறிக்கிறது. இதற்கு அடுத்தபடியாக வென்யூ மாடல் உள்ளது. மே 2024இல் இந்த மாடல் 9,327 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. இது கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது 9% சரிவைக் குறிக்கிறது. இந்த குறைவு இருந்தபோதிலும், கடந்த மாதத்தை விட வென்யூ மாடலின் விற்பனை 2% அதிகரித்துள்ளது.