ஏர்பேக் கோளாறு: 750,000 கார்களை திரும்பப் பெற இருக்கிறது ஹோண்டா
ஏர்பேக் கோளாறு காரணமாக, அமெரிக்காவில் புழக்கத்தில் இருக்கும் 750,000 வாகனங்களை ஹோண்டா திரும்பப் பெற இருக்கிறது என்று தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த 750,000 வாகனங்களிலும் முன்பக்க பயணிகள் இருக்கையின் எடை சென்சாரில் சிக்கல் உள்ளது என்று கூறப்படுகிறது. அதனால், விபத்து ஏற்படும் போது, அதில் விரிசல் மற்றும் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு ஏர்பேக் தானாகவே செயல்படுத்தப்படும். 2020-2022 க்கு இடையில் தயாரிக்கப்பட்ட சில ஹோண்டா அக்கார்ட், பைலட் மற்றும் சிவிக் செடான்களையும், 2020 மற்றும் 2021 க்கு இடையில் தயாரிக்கப்பட்ட சில ஹோண்டா பாஸ்போர்ட் மற்றும் CR-V கார்களையும் ஹோண்டா திரும்ப பெற உள்ளது.
இது போன்ற ஒரு சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல
எடை சென்சார் செயலிழப்பு தான் இதற்கு பெரும் காரணமாக உள்ளது என்று தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேற்கூறிய பாதிக்கப்பட்ட கார்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் வைத்திருந்தால், மேலும் தகவல் மற்றும் உதவிக்கு உங்கள் உள்ளூர் டீலரைத் தொடர்புகொள்வது அவசியம். உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தங்களது வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த ஹோண்டா கடுமையாக உழைத்து வருகிறது. ஹோண்டா நிறுவனத்தில் இது போன்ற ஒரு சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. 2023 டிசம்பரில், பெட்ரோல் டேங்க் செயலிழக்கும் அபாயம் இருந்ததால்,அமெரிக்காவில் புழக்கத்தில் இருந்த 2.54 மில்லியன் கார்கள் உட்பட, உலகளவில் புழக்கத்தில் இருந்த சுமார் 4.5 மில்லியன் வாகனங்களை ஹோண்டா திரும்பப் பெற வேண்டியிருந்தது