5 லட்சம் ஹோண்டா கார்களில் ஏற்பட்ட பிரச்சினை - அவசர ரீ-கால் விடுப்பு!
ஐப்பான் நாட்டை சேர்ந்த முன்னணி கார் நிறுவனமான ஹோண்டா மிக அதிக எண்ணிக்கையிலான கார்களை திரும்ப பெற உள்ளது. அதாவது, ஏற்கனவே விற்கப்பட்ட கார்களை சர்வீஸ் மையங்களுக்கு எடுத்து வருவதற்கான அவசர அழைப்பையே ஹோண்டா நிறுவனம் விடுத்திருக்கின்றது. இதற்கு காரணமாக பாதுகாப்பு கருவியில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினையை சீர் செய்யும் விதமாகவே இந்த ரீ-கால் விடுக்கப்பட்டுள்ளது. ஹோண்டா கார்களில் சீட் பெல்ட் கொக்கிகளில் கோளாறு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்துள்ளது. இதனை சரிசெய்ய தான் இந்த அழைப்பை விடுத்துள்ளது. வாகன விபத்து ஏற்படும் போது எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சீட் பெல்ட்டுகள் உள்ளன.
5 லட்சம் ஹோண்டா கார்களில் ஏற்பட்ட பிரச்சினை - அழைப்பு விடுத்த நிறுவனம்
பல உயிர்களை இந்த கருவி காப்பாற்றி இருக்கின்ற காரணத்தினால் இதனை உயிர் காக்கும் கருவி என வாகனத்துறையில் தெரிவிப்பார்கள். எனவே, 5 லட்சத்திற்கும் அதிகமான ஹோண்டா கார்களில் சீட் பெல்ட் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. மேலும், இந்த அவசர அழைப்பு அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய சந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற நாடுகளுக்கு இது பொருந்தாது, இந்தியர்கள் இதை எண்ணிக் கவலை அடைய தேவையில்லை. செல்போன் அழைப்பு, குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக இந்த அழைப்பை ஹோண்டா விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.