இந்தியாவில் சாகச சுற்றுலாவுக்கு ஏற்ற புதிய பைக் மாடலை அறிமுகம் செய்தது ஹோண்டா
ஹோண்டா தனது சமீபத்திய சாகச சுற்றுலாவுக்கு ஏற்ற எக்ஸ்எல் 750 டிரான்சால்ப் பைக் மாடலை இந்தியாவில் ரூ.11 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தி உள்ளது. முதற்கட்டமாக இந்த மாடலில் 100 பைக்குகளை மட்டுமே வெளியிட ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், ஹோண்டாவின் பிக்விங் டீலர்ஷிப்களில் இதற்கான முன்பதிவுகள் தொடங்கி நடந்து வருகின்றன. ட்ரான்சால்பின் வடிவமைப்பு, அதன் பெரிய இணையான ஆப்பிரிக்கா ட்வினை ஒத்திருக்கும் என்றும், இது நேர்த்தியான ஹெட்லேம்ப் உயர்த்தப்பட்ட விண்ட்ஸ்கிரீனையும் கொண்டுள்ளது. முன்பதிவுகள் இப்போது தொடங்கப்பட்டு அடுத்த மாதம் டெலிவரி செய்யப்படும் நிலையில், புதிய ஹோண்டா எக்ஸ்எல் 750 டிரான்சால்ப் இந்தியாவின் சாகச சுற்றுலா மாடல் பைக் சந்தையில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோண்டா எக்ஸ்எல் 750 டிரான்சால்ப் சிறப்பம்சங்கள்
ஹோண்டா எக்ஸ்எல் 750 டிரான்சால்ப் ஆனது 5.0 இன்ச் டிஎப்டி டிஸ்ப்ளே, முழு எல்இடி லைட்டிங் மற்றும் ஸ்மார்ட்போன் ஒருங்கிணைப்பு போன்ற பல அம்சங்களை கொண்டுள்ளது. எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல், டிராக்ஷன் கண்ட்ரோல், ரைடு-பை-வயர் த்ரோட்டில், ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் ஐந்து ரைடிங் மோடுகளும் வழங்கப்படுகின்றன. 755சிசி, பேரலல்-ட்வின் இன்ஜின் 90எச்பி மற்றும் 75என்எம் டார்க்கை உருவாக்குகிறது. மேலும் இதில் ஆறு வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. 21-18-இன்ச் ஸ்போக் வீல் செட்டப், எக்ஸ்எல் 750 டிரான்சால்ப்பின் சஸ்பென்ஷன் ஷோவா தலைகீழ் முன் ஃபோர்க்குகள் மற்றும் ஒரு ப்ரோ-லிங்க் பின்புற மோனோ-ஷாக் யூனிட் கட்டமைப்பைக் கொண்டுள்ளது.