
ஹீரோ மோட்டோகார்ப் 2025 ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் மேம்பட்ட அம்சங்களுடன் அறிமுகம்
செய்தி முன்னோட்டம்
ஹீரோ மோட்டோகார்ப் அதன் சிறப்புமிக்க இரு சக்கர வாகனமான ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸின் 2025 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒட்டுமொத்த வடிவமைப்பு பெரும்பாலும் மாறாமல் இருந்தாலும், புதிய மாடல் காஸ்மெட்டிக் அம்சங்கள் மற்றும் என்ஜின் இரண்டிலும் சமீபத்திய உமிழ்வு தரநிலைகளுக்கு ஏற்ப புதுப்பிப்புகளைக் கொண்டுள்ளது.
2025 ஸ்ப்ளெண்டர் பிளஸ் 4-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட 97.2சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் SOHC 2-வால்வு எஞ்சின் மூலம் தொடர்ந்து இயக்கப்படுகிறது.
செயல்திறன் புள்ளிவிவரங்கள் 7.91 பிஎச்பி மற்றும் 8.05 நிமீ டார்க்கில் ஒரே மாதிரியாக இருந்தாலும், பவர்டிரெய்ன் இரண்டாம் கட்ட OBD-2B உமிழ்வு விதிமுறைகளை பூர்த்தி செய்ய புதுப்பிக்கப்பட்டுள்ளது, இது சிறந்த சுற்றுச்சூழல் இணக்கத்தை உறுதி செய்கிறது.
லுக்
லுக்கில் அதிக கவனம் செலுத்திய ஹீரோ மோட்டோகார்ப்
லுக் ரீதியாக, பைக்கில் இப்போது ஸ்போர்ட்டியர் டைப்பில் புதுப்பிக்கப்பட்ட பக்க கிராபிக்ஸ் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட டிரிம்களில் கிடைக்கும் திருத்தப்பட்ட பில்லியன் கிராப் ரெயில் மற்றும் புதுப்பிக்கப்பட்ட லக்கேஜ் ரேக் போன்ற சிறிய மேம்பாடுகள் உள்ளன.
2025 ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் வரிசையில் ஸ்ப்ளெண்டர்+ டிரம் பிரேக், ஸ்ப்ளெண்டர்+ ஐ3எஸ், ஸ்ப்ளெண்டர்+ ஐ3எஸ் பிளாக் & ஆக்சென்ட் மற்றும் மூன்று எக்ஸ்டெக் டிரிம்கள் உள்ளிட்ட ஆறு வகைகள் உள்ளன.
இதன் விலை ரூ.79,096 முதல் ரூ.85,001 (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது.
மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த தொடக்க நிலை பயணிகள் பிரிவில், ஸ்ப்ளெண்டர் பிளஸ், டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ், ஹோண்டா ஷைன் 100 மற்றும் பஜாஜ் பிளாட்டினா 100 போன்ற போட்டியாளர்களை எதிர்கொள்கிறது.