டியோ ஸ்கூட்டருக்கு போட்டியாக அறிமுகமாகும் ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்!
நாளுக்கு நாள் புதுப் புதுவகையான இரு சக்கர வாகனங்கள் அறிமுகமாகி வரும் நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புத்தம் புதிய ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு புதிய டீசரையும் வெளியிட்டது. அதன் படி புதிய ஸ்கூட்டரான 110 சிசி கொண்ட Xoom தான் வெளியாக இருக்கிறது. வரும் ஜனவரி 30 அன்று இந்த மாடல் சந்தையில் அறிமுகமாக இருக்கிறது. இந்தியாவில் 110 சிசி இருசக்கர வாகனப் பிரிவை அலங்கரிக்கும் விதமாக ஸூம் ஸ்கூட்டர் மாடலைக் களமிறக்க திட்டமிட்டுள்ளது.
ஸ்டைலிஷ் தோற்றம், நவீன அம்சங்களுடன் வரும் ஹீரோ ஸூம்
இந்த ஸ்கூட்டரில், செல்போன் இணைப்பு தொழில்நுட்பம், செல்போன் சார்ஜ் செய்யும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வருகை ஹோண்டா டியோவிற்குக் கடுமையான போட்டியை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது. இன்னும் பல அம்சங்களாக ஸூம் ஸ்கூட்டரில், , எல்இடி ஹெட்லைட், எக்ஸ் ஸ்டைலிலான முகப்பு பகுதி, பெரிய ஸ்டோரேஜ் வசதி, ஸ்விட்சபிள் ஐ3எஸ் பட்டன் போன்ற அம்சங்களும் இந்த ஸ்கூட்டரில் இடம் பெற இருக்கின்றன. இந்த ஐ3எஸ் பட்டன் என்பது எரிபொருளை தேவைக்கேற்ப நிறுத்துதல் மற்றும் உட்செலுத்துலைச் அளிக்கும். இதற்கு முன் ஹீரோ நிறுவனம் விடா வி1 எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. விற்பனையைத் தொடர்ந்து சென்ற மாதத்தின் இறுதியிலேயே மின்சார ஸ்கூட்டரின் டெலிவரி பணிகளும் நாட்டில் தொடங்கின.