7 அல்டிமேட் மாடல்களை அறிமுகப்படுத்தும் Harley Davidson! குஷியில் பைக் பிரியர்கள்;
உலகில் உள்ள பைக் பிரியர்களுக்கு ஹார்லி டேவிட்சன் பைக் ஓட்டுவது என்பது அவர்களது வாழ்நாள் விருப்பம் என்று சொன்னால் மிகையில்லை. அந்த அளவிற்கு ஸ்டைல், வேகம், கம்பீரம் என ஹார்லி எப்போதுமே தனித்துவமாக திகழும். இந்நிலையில், ஹார்லி டேவிட்சன் தனது 120வது ஆண்டுவிழாவை கொண்டாடுகிறது. அதனை முன்னிட்டு 7 பைக் மாடல்களை அறிமுகப்படுத்துகிறது. Harley-Davidson CVO Road Glide Limited, சர்வதேச அளவில் 1,500 யூனிட்டுகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ. 42.30 லட்சம் ஆகும். ஹார்லி-டேவிட்சன் ஃபேட் பாய் 114 இன் விலை சுமார் ரூ. 17.65 லட்சம் . ஹார்லி-டேவிட்சன் ஹெரிடேஜ் கிளாசிக் 114 சுமார் ரூ. 18.46 லட்சம் மற்றும் இது 1,700 யூனிட்டுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
7 புதிய மாடல்களை அறிமுகப்படுத்தும் ஹார்லி டேவிட்சன்
Harley-Davidson Tri Glide Ultra Anniversary Edition மிகவும் குறைந்த எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டு 1,100 யூனிட்கள், சுமார் ரூ. 33.59 லட்சத்திற்கு விற்கப்படும். ஸ்ட்ரீட் க்ளைடு ஸ்பெஷல் மற்றும் ரோட் க்ளைடு ஸ்பெஷல் விலை சுமார் ரூ. 25.13 லட்சம் . அல்ட்ரா லிமிடெட் சுமார் ரூ. 26.68 லட்சத்தில் இருந்து தொடங்கும். 2020 ஆம் ஆண்டு ஹார்லி நாட்டை விட்டு வெளியேறியதால், இந்த பைக்குகள் இந்திய சந்தைக்கு வர வாய்ப்பில்லை. ஆனால், ஹார்லி பைக் உரிமையாளர்களுக்கு சேவை வசதிகளை வழங்குவதற்காக, ஹீரோ மோட்டோகார்ப் உடன் நிறுவனம் கூட்டணி வைத்துள்ளது. இரண்டு நிறுவனங்களும் பிரீமியம் மோட்டார் சைக்கிள்களின் வரம்பில் பணிபுரிந்து வருகின்றன, அவை அடுத்த ஆண்டு இறுதியில் வெளியிடப்படும்.