ஜனவரி மாதம் முதல், கார் விலையை உயர்த்தியுள்ள பிராண்டுகள் விவரம் உள்ளே
பெருந்தொற்று காலத்திற்கு பிறகு, அதிகரித்து வரும் உள்ளீடு செலவுகள் மற்றும் தளவாட தடைகள் ஆகிய காரணிகளால், கார் நிறுவனங்கள், தங்கள் கார்களின் விலையை உயர்த்தும் கட்டாயத்திலுள்ளன. இந்த ஜனவரியில், ஜீப், கியா, சிட்ரோயன், ரெனால்ட் மற்றும் எம்ஜி மோட்டார் போன்ற நிறுவனங்கள், தங்கள் கார்களின் விலையை உயர்த்தியுள்ளன. ரெனால்ட் கார்கள், இப்போது அதிகபட்சமாக, ரூ.14,300 விலை ஏற்றப்பட்டு விற்கப்படுகிறது. ரெனால்ட் கிவிட்-இன் விலை இப்போது ரூ.4.7 லட்சம் முதல் ரூ. 5.99 லட்சம் வரை விற்கப்படுகிறது. சிட்ரோயன் வாகனங்கள் விலை ரூ. 50,000 வரை ஏற்றப்பட்டுள்ளது. தற்போது, சிட்ரோயன் C3, 8.25 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. மேலும், C5 Aircross, ரூ. 37.17 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.
கியா, MG மற்றும் ஜீப்-பின் விலைகளும் ஏற்றம்
கியா நிறுவனம், கார்களின் விலையை ரூ. 1 லட்சம் வரை உயர்த்தியுள்ளது. சோனெட், அதிகபட்சமாக ரூ. 14.39 லட்சதிற்கும், செல்டோஸ், 19.15 லட்சம் லட்சம் வரையிலும் விற்படுகிறது. கியா EV6 ஆனது ரூ. 60.95-65.95 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. எம்ஜி கார்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆஸ்டர், அதிகபட்சமாக ரூ.18.43 லட்சம் வரையிலும், ஹெக்டர், ரூ 20.66 லட்சம் வரையிலும், ZS EV, ரூ 26.9 லட்சம் வரையிலும் விற்பனையாகிறது. குளோஸ்டர் உச்சபட்சமாக, ரூ. 32.6-41.78 லட்சம் வரை விற்கப்படுகிறது. ஜீப் கார்கள் ரூ. 1.2 லட்சம் விலையேற்றப்பட்டுள்ளது. ஜீப் மெரிடியன் ரூ. 37.15 லட்சம் வரை விலையேற்றப்பட்டுள்ளது. ஜீப் ரேங்லரின் விலை ரூ. 59.05-63.05 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்கப்படுகிறது.