ஜனவரி முதல் ரூ 30,000 வரை வாகன விலையை உயர்த்த ஹோண்டா திட்டம்
ஜப்பான் நாட்டை சேர்ந்த கார் தயாரிப்பாளரான ஹோண்டா கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், தனது வாகனங்களின் விலையை ரூ.30,000 வரை, உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த விலையேற்றம், ஹோண்டா கார் மாடல்களுக்கு தகுந்தாற்போல் மாறுபடும் எனவும் ஹோண்டாவின் மூத்த அதிகாரி தெரிவித்தார். இந்த விலையேற்றம் இந்தியா மார்கெட்டிற்கு மட்டும் என செய்திகள் ஊகிக்கின்றன. இதே போல், இந்தியா மார்க்கெட்டில் உள்ள மற்ற கார் உற்பத்தியாளர்களான, மாருதி சுஸுகி, டாடா, ஹ்யுண்டாய், பென்ஸ்,ஆடி, ரெனால்ட், கியா மற்றும் MG மோட்டார் அகையவையும் அடுத்த மாதம் முதல் விலை ஏற்றப்போவதாக அறிவித்துள்ளன.
ஹோண்டா கார்கள் விலையேற்றம்
அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகளை சமாளிக்கவும், கடுமையான மாசு உமிழ்வு கட்டுப்பாடுகளை சமாளிக்கவும் எதுவாக இந்த விலையேற்றம் இருக்கும் என கார் நிறுவனங்கள் தெரிவித்தது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைமுறைக்கு வரவிருக்கும், இரண்டாம் கட்ட BS-VI உமிழ்வு விதிமுறைகளின் படி, அனைத்து வாகனங்களிலும், உமிழ்வு அளவைக் கண்காணிக்க, சுய-கண்டறியும் சாதனம் பொருத்தி இருக்க வேண்டும். உமிழ்வுகளை உன்னிப்பாகக் கண்காணிக்க, வினையூக்கி மாற்றி மற்றும் ஆக்ஸிஜன் சென்சார்கள் போன்ற உமிழ்வு தரநிலைகளைப் பூர்த்தி செய்வதற்கான முக்கிய பகுதிகளை சாதனம் தொடர்ந்து கண்காணிக்கும். இந்த சாதனம், கேட்டலிஸ்ட் கன்வெர்ட்டர், ஆக்ஸிஜன் சென்சார் போன்ற முக்கிய பாகங்களில் இருந்து வெளிவரும் உமிழ்வு தரத்தை கங்காணிக்கும் நோக்கில் பொருத்தப்படும்.