இந்தியாவில் புதிய கரிஸ்மா XMR பைக்கை வெளியிட்டுள்ளது ஹீரோ
செய்தி முன்னோட்டம்
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, தற்போது தங்களுடைய புதிய கரிஸ்மா XMR பைக்கை வெளியிட்டிருக்கிறது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம். மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நுழைகிறது கரிஸ்மா.
அட்ஜஸ்டபிள் விண்டுஸ்கிரீன், ப்ளூடூத் கனெக்டிவிட்டியுடன் கூடிய LCD டேஷ்போர்டு மற்றும் முழுவதுமாக எல்இடி மயமான விளக்குகளுடன் மூன்று நிறங்களில் வெளியாகியிருக்கிறது புதிய கரிஸ்மா XMR.
மேலும், டூயல் சேனல் ஏபிஎஸ் வசதியை முதன் முதலாக இந்த பைக்கில் தான் பயன்படுத்தியிருக்கிறது ஹீரோ நிறுவனம்.
இந்தியாவில் யமஹா R15 V4, சுஸூகி ஜிக்ஸர் SF 250, பல்சர் RS 200 மற்றும் கேடிஎம் RC 200 ஆகிய பைக் மாடல்களுக்குப் போட்டியாகக் களமிறங்கியிருக்கிறது ஹீரோ கரிஸ்மா XMR.
ஹீரோ
ஹீரோ கரிஸ்மா XMR: இன்ஜின் மற்றும் விலை
புதிய கரிஸ்மாவில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட, 210சிசி, லிக்விட் கூல்டு இன்ஜினைக் கொடுத்திருக்கிறது ஹீரோ. இந்த இன்ஜினானது, 9,250rpm-ல் 25.5hp பவரையும், 7,250rpm-ல் 20.4Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது.
மேலும், இந்த பைக்கில் ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச்சுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பார்ஸைக் கொடுத்திருக்கிறது ஹீரோ. இத்தனுடன் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்பக்கம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுமே வகையிலான ப்ரீலோடு மோனோஷாக் சஸ்பென்ஷன் செட்டப் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில், ரூ.1.73 லட்சம் தொடக்க விலையில், இந்த புதிய லிக்விட்-கூல்டு இன்ஜின் கொண்ட கரிஸ்மா XMR பைக்கை வெளியிட்டிருக்கிறது ஹீரோ மோட்டோகார்ப்.