Page Loader
ஒரே சார்ஜில் 100கிமீ செல்லும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்! விலை இவ்வளவு தானா?
100கிமீ தூரம் செல்லும் Gemopai Ryder supermax எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஒரே சார்ஜில் 100கிமீ செல்லும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்! விலை இவ்வளவு தானா?

எழுதியவர் Siranjeevi
Mar 01, 2023
05:21 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய வாகன சந்தையில் பெட்ரோல் வாகனத்தைவிட எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மவுசு அதிகரித்துவிட்டது. பல நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனத்தை போட்டி போட்டுக்கொண்டு அறிமுகம் செய்து வருகின்றனர். அந்தவகையில், இந்தியாவை சேர்ந்த ஜெமோபாய் நிறுவனம் தற்போது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டருக்கு ரைடர் சூப்பர்மேக்ஸ் (Ryder Supermax) என பெயர் சூட்டப்பட்டியுள்ளது. 6 கலர்களில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கும். அதேப்போல், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் BLDC Hub Motor பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 2.7 kW பவரை வெளிப்படுத்தும். எனவே இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 100 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

Gemopai Ryder supermax எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் - சிறப்புகள் என்ன?

அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்துவோருக்கு இது போதுமானதாக இருக்கும். இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர, இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஜெமோபாய் கனெக்ட் செயலி தொழில்நுட்ப வசதியும் வழங்கப்பட்டுள்ளது. விலை விபரம் இங்கே, சூப்பர்மேக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 79,999 ரூபாய் மட்டுமே. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். மேலும், ஜெமோபாய் ரைடர் சூப்பர்மேக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் வரும் 10ம் தேதியில் இருந்து தொடங்குகின்றன.