டாப் 5 கிளாஸிக்கல் கார்கள் - சாட்ஜிபிடியின் லிஸ்ட்!
சாட்ஜிபிடி-யிடம் டாப் 5 கிளாஸிக்கல் கார்கள் பற்றி கேள்வி கேட்க, அது ஒரு பட்டியலைக் கொடுத்திருக்கிறது அந்த சாட்பாட். சாட்ஜிபிடி-யின் பட்டியலில் இருக்கும் டாப் 5 கிளாஸிக்கல் கார்கள் இதோ. 1963 செவர்லே கார்வெட் ஸ்டிங்ரே: தனித்துவமான அனைவரையும் கவரக்கூடிய டிசைன், பவர்ஃபுல் இன்ஜின் மற்றும் அசாத்தியமான பெர்ஃபாமன்ஸ் என ஆல்ரவுண்டரான கார் '63 கார்வெட். V8 இன்ஜின் மற்றும் ஏரோடைனமிக்கான டிசைனுடன் அமெரிக்கன் ஆல்-டைம் ஃபேவரைட் காராக விளங்குகிறது இந்த கார்வெட். 1961 ஜாகுவார் E-டைப்: இந்தக் வெளியான காலகட்டத்தல், இதன் டிசைன் பலரையும் தன்வசம் ஈர்த்த கார். ஏரோடைனமிக்கான டிசைனுடன், சிறந்த பெர்ஃபாமன்ஸையும் கொண்ட கார் இது. டாப் ஸ்பீடு 150 மைல்களாம்.
கிளாஸிக்கல் கார்கள்
1969 ஃபோர்டு மஸ்டாங் பாஸ் 429: அந்த சமயத்தில் நாஸ்கார் பந்தயத்தில் போட்டியிடுவதற்காக வடிவைமைக்கப்பட்ட மஸில் கார் இது. இன்றும் இதற்கான மவுசு குறையவில்லை. இப்போதும் கார் ஆர்வலர்கள், தங்கள் கராஜில் வைத்துப் பாதுகாக்க இந்த காருக்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். 1957 மெர்சிடீஸ் பென்ஸ் 300SL: காலம் கடந்து இன்றும் அழகான டிசைனுக்காக கொண்டாடப்படும் கார் இது. 1950 காலகட்டத்தின் ஆட்டோமொபைல் சின்னமாக விளங்குகிறது இந்தக் கார். 1967 ஷெல்பி GT500: பெர்ஃபாமன்ஸை மட்டுமே மனதில் வைத்து உருவாக்கப்பட்ட கிளாஸிக்கல் மஸில் கார் இது. அதற்காக இதன் ஸ்டைலை குறைத்து மதிப்பிட முடியாது. அக்ரஸிவ் ஸ்டைலிங்குடன் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த கார்.