NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களின் பெயர்களை இந்தியாவில் பதிவு செய்திருக்கும் BYD
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களின் பெயர்களை இந்தியாவில் பதிவு செய்திருக்கும் BYD
    புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களின் பெயர்களை இந்தியாவில் பதிவு செய்திருக்கும் BYD

    புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களின் பெயர்களை இந்தியாவில் பதிவு செய்திருக்கும் BYD

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 21, 2023
    04:06 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வரும் சீன நிறுவனமான BYD, இந்தியாவில் புதிதாக இரண்டு எலெக்ட்ரிக் கார்களின் பெயர்களைப் பதிவு செய்திருக்கிறது.

    இந்தாண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் 'சீல்' என்ற புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை காட்சிப்படுத்தியிருந்தது BYD.

    மேலும், 'e6' மற்றும் 'அட்டோ 3' ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் அந்நிறுவனம் விற்பனையும் செய்து வருகிறது.

    இந்நிலையில், 'சீகல்' (Seagull) என்ற எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் மாடல் ஒன்றின் பெயரையும், 'சீ லயன்' (Sea Lion) என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவின் மாடல் ஒன்றின் பெயரையும் தற்போது இந்தியாவில் பதிவு செய்திருக்கிறது BYD.

    BYD

    BYD-யின் புதிய எலெக்ட்ரிக் கார்கள்: 

    BYD-யின் மேற்கூறிய இரண்டு எலெக்ட்ரிக் கார் மாடல்களில், சீகல் மாடலானது ஏற்கனவே வெளிநாட்டு ஆட்டோமொபைல் சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்தியாவில் இந்த மாடல் அறிமுகப்படுத்தப்படும் பட்சத்தில், டாடாவின் டியாகோ EV மற்றும் சிட்ரன் eC3 ஆகிய மாடல்களுக்குப் போட்டியாகக் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மற்றொரு மாடலான சீ லயன் மாடலானது, வெளிநாட்டுச் சாலைகளில் தற்போது தான் சோதனை செய்யப்பட்டு வருகிறது. மிட்சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலான இதனை, தங்களுடைய e-பிளாட்ஃபார்ம் 3.0வில் உருவாக்கியிருக்கிறது BYD.

    ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 700 கிமீ வரை ரேஞ்சைக் கொடுக்கக்கூடிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது BYD.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எலக்ட்ரிக் கார்
    எலக்ட்ரிக் வாகனங்கள்
    ஆட்டோமொபைல்
    சீனா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    எலக்ட்ரிக் கார்

    திடீரென டெஸ்லா காரின் விலை குறைப்பு - எந்த மாடலுக்கு? ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    புதிய 10 எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் டொயோட்டா - வெளியான அப்டேட்! கார்
    MG-யின் புதிய எலெக்ட்ரிக் கார்.. எப்போது வெளியீடு? ஆட்டோமொபைல்
    நெக்ஸான் EV மேக்ஸின் டார்க் எடிஷனை வெளியிட்டது டாடா  டாடா மோட்டார்ஸ்

    எலக்ட்ரிக் வாகனங்கள்

    100 சதவீதம் மின்சார வாகன மாநிலமாக உபி மாறும்! முதல்வர் யோகி ஆதித்யநாத்  உத்தரப்பிரதேசம்
    எலெக்ட்ரிக் வாகன மேம்பாட்டிற்கு ரூ.1 லட்சம் கோடி.. அறிவிப்பை வெளியிட்டது ஜாகுவார்!  டாடா மோட்டார்ஸ்
    தங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வெளியீட்டுத் தேதியை அறிவித்து சிம்பிள் எனர்ஜி!  எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    வாடிக்கையாளர்களுக்கு சார்ஜருக்கான தொகையை திரும்ப அளிக்கவிருக்கும் ஓலா நிறுவனம் ஓலா

    ஆட்டோமொபைல்

    ரூ.30,000 வரை சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மஹிந்திரா தார் மஹிந்திரா
    தங்கள் பைக் மாடல்களுக்கு புதிய பெயின்ட் ஸ்கீம்களை அறிமுகப்படுத்திய ட்ரையம்ப் ப்ரீமியம் பைக்
    நார்டான் பிராண்டிங்கின் கீழ் புதிய பைக் பெயரை பதிவு செய்திருக்கும் டிவிஎஸ் ப்ரீமியம் பைக்
    ஸ்பீடு 400 பைக்கின் ஆன்-ரோடு விலை குறித்த அறிவிப்பை வெளியிட்டது ட்ரையம்ப் ப்ரீமியம் பைக்

    சீனா

    32,808 அடி ஆழத்திற்கு குழி தோண்டும் சீனா: காரணம் என்ன  உலகம்
    பினான்ஸ் கிரிப்டோ தளத்தின் மீது புகார்களை அடுக்கிய SEC.. என்ன நடந்தது? அமெரிக்கா
    உளவு செயற்கைக்கோளை ஏவ திட்டமிடுகிறது அமெரிக்கா: காரணம் என்ன  ரஷ்யா
    கடைசி இந்தியப் பத்திரிகையாளரையும் வெளியேற்றுகிறது சீனா இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025