மீண்டும் விற்பனைக்கு தயாரான பஜாஜ் பல்சர் 220எஃப் - முன்பதிவு எப்போது?
பஜாஜ் நிறுவனம் அதன் புகழ்பெற்ற இருசக்கர வாகனமான பல்சர் 220-ஐ பைக்கை மீண்டும் அறிமுகப்படுத்தப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக, சில பஜாஜ் இருசக்கர வாகன விற்பனையாளர்கள் பல்சர் 220-க்கான புக்கிங்குகளை ஏற்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றனர். ஆகையால், விரைவில் பஜாஜ் நிறுவனத்திடம் இருந்து பல்சர் 220 பைக்கின் அறிமுகம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், பஜாஜ் நிறுவனம் இந்த பைக் மாடலை முதன் முதலில் 2007 ஆம் ஆண்டிலேயே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த பைக்கை விற்பனையில் இருந்து அகற்றி பஜாஜ் நடவடிக்கை எடுத்தது. 15 ஆண்டுகளாக விற்பனையில் இருந்த நிலையில் திடீரென பல்சர் 220-ஐ பஜாஜ் வெளியேற்றியது.
பஜாஜ் பல்சர் 220எஃப் மீண்டும் விற்பனைக்கு வருகிறது - மாற்றங்கள் என்ன?
இந்நிலையில், மீண்டும் இந்த பைக்கின் உற்பத்தி பணிகள் தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. புதிய மாற்றங்களான உருவம் மற்றும் ஸ்டைலில் கணிசமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எஞ்ஜினிலும் புதிய பிஎஸ் 6 ஃபேஸ் 2 விதிகளுக்கு ஏற்ற மாற்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தவிர, சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக பைக்கின் முன் பக்க வீலிற்கு 260 மிமீ டிஸ்க்கும், பின் பக்க வீலில் 230 மிமீ டிஸ்க்கும் பொருத்தப்பட்டது. இத்தோடு, சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் அம்சமும் பல்சர் 220எஃப்-இல் வழங்கப்பட்டது. இதே அம்சங்கள் விரைவில் வரவிருக்கும் பல்சர் 220எஃபிலும் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பைக்கின் விலை சுமார் ரூ. 1.35 லட்சம் எக்ஸ் ஷோ ரூம் விலையில் கிடைக்கும்.