
புதிய எலெக்ட்ரிக் i5 மாடலை அறிமுகப்படுத்தியது BMW.. இந்தியாவில் வெளியீடு எப்போது?
செய்தி முன்னோட்டம்
தங்களது 5 சீரிஸ் செடான் லைன்-அப்பில் முழுமையான எலெக்ட்ரிக் காரான i5 செடான் குறித்த தகவல்களையும் தற்போது வழங்கியிருக்கிறது பிஎம்டபிள்யூ. iX1, i4 மற்றும் i7-ஐ தொடர்ந்து பிஎம்டபிள்யூவின் முழுமையான எலெக்ட்ரிக் லைன்-அப்பில் நான்காவதாக இணையவிருக்கிறது 'பிஎம்டபிள்யூ i5'.
ரியர் வீல் டிரைவ் eடிரைவ்40 மற்றும் 4-வீல் டிரைவ் M60 xடிரைவ் என இரண்டு ட்ரிம்களில் வெளியாகவிருக்கிறது பிஎம்டபிள்யூவின் இந்த புதிய எலெக்ட்ரிக் செடான்.
இரண்டு மாடல்களிலும் 81.2kWh லித்தியம்-அயன் பேட்டரி ஸ்டாண்டர்கடாகவே வழங்கப்படவிருக்கிறது. eடிரைவ் 40-யானது 497-582 கிமீ ரேஞ்சையும், M60 xடிரைவ் 455-516 கிமீ ரேஞ்சையும் கொண்டிருக்கிறது. 205kW டிசி சார்ஜிங் வசதியுடன் இந்த இரண்டு மாடல்களும் 30 நிமிடத்தில் 10-80% வரை சார்ஜ் ஆகிவிடும் எனத் தெரிவித்திருக்கிறது பிஎம்டபிள்யூ.
பிஎம்டபிள்யூ
எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் வெளியீடு:
eடிரைவ் 40-யில் 340hp பவர் மற்றும் 430Nm டார்க்கை வெளிப்படுத்தும் எலெக்ட்ரிக் மோட்டார் பின்பக்க வீலுடன் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சம் 193 கிமீ வேகத்தைக் கொண்டிருக்கும் இந்த மாடலானது 0-100 கிமீ வேகத்தை 6.0 நொடிகளில் எட்டிப் பிடிக்கிறது.
M60 xடிரைவில் மேற்கூறிய எலெக்ட்ரிக் மோட்டாருடன், கூடுதலாக முன்பக்க வீலுடனும் ஒரு சிறிய எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக 601hp பவர் மற்றும் 820Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது M60 xடிரைவ் மாடல். மேலும், 0-100 கிமீ வேகத்தை 3.8 நொடிகளில் தொடுகிறது இந்த மாடல்.
சர்வதேச சந்தையில் இந்த மாடலுக்கு போட்டியாக விற்பனை செய்யப்படும் மாடல்கள் இந்தியாவில் வெளியடப்படாததால், போட்டியின்றி 2024-ல் இந்தியாவில் களமிறங்குகிறது பிஎம்டபிள்யூ i5.