Loading...
இந்தியாவில் காப்புரிமை பெற்ற மாபெரும் M கான்செப்ட் நியூ கிளாஸ்; பிஎம்டபிள்யூ கார் பிரியர்கள் உற்சாகம்
இந்தியாவில் காப்புரிமை பெற்றது மாபெரும் M கான்செப்ட் நியூ கிளாஸ்

இந்தியாவில் காப்புரிமை பெற்ற மாபெரும் M கான்செப்ட் நியூ கிளாஸ்; பிஎம்டபிள்யூ கார் பிரியர்கள் உற்சாகம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 21, 2026
01:58 pm

செய்தி முன்னோட்டம்

ஜெர்மனியின் ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ, தனது எதிர்கால அதிவேக மின்சார செடான் காரான M கான்செப்ட் நியூ கிளாஸ் காரின் டிசைனை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக காப்புரிமை செய்துள்ளது. ஜூன் 2026-இல் பிரான்சில் நடைபெற்ற புகழ்பெற்ற 24 ஹவர்ஸ் ஆஃப் லீ மான்ஸ் பந்தயத்தில் இந்த கான்செப்ட் கார் முதன்முறையாக உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய சந்தையில் தனது மின்சார வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியின் பகுதியாகவே இக்காப்புரிமை பார்க்கப்படுகிறது.

ரேஸ் கார் 

ரேஸ் கார் பாணியில் தயாராகியுள்ள முரட்டுத்தனமான வெளிப்புற டிசைன்

இந்த கான்செப்ட் கார் தாழ்வான வடிவமைப்பு, அகலமான வீல் ஆர்ச்கள் மற்றும் காற்றியக்கவியல் கொண்ட பாடிவொர்க்குடன் உருவாக்கப்பட்டுள்ளது.

முன்பக்கத்தில் ஷார்க் -நோஸ் (Shark-nose) டிசைன், 3D ட்ராக் லைட்டுகள் மற்றும் பிரத்யேக M-Aero பக்கவாட்டு கண்ணாடிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பின்புறத்தில் மிதக்கும் ஃபைபர் டிஃப்பியூசர் மற்றும் டேக்டெயில் ஸ்பாய்லர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க இயற்கை நாரிலான ஃபைபர் பொருட்கள் வெளிப்புறத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஹார்ட் ஆஃப் ஜாய்

நான்கு எலக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் ஹார்ட் ஆஃப் ஜாய் தொழில்நுட்பம்

இந்த கார் நான்கு சக்கரங்களுக்கும் தலா ஒன்று என மொத்தம் 4 எலக்ட்ரிக் மோட்டார்களுடன் கூடிய குவாட்-மோட்டார் அமைப்பைக் கொண்டுள்ளது.

இதில் உள்ள டைனமிக் பெர்ஃபார்மன்ஸ் கன்ட்ரோல் சிஸ்டம் நான்கு சக்கரங்களுக்கும் தேவையான ஆற்றலை சரியாகப் பிரித்து வழங்குகிறது.

ஹார்ட் ஆஃப் ஜாய் (Heart of Joy) என்ற அதிநவீன கம்ப்யூட்டிங் தொழில்நுட்பம் கார் இயக்கம் மற்றும் பிரேக்கிங் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கிறது.

மேலும் 800V ஆர்க்கிடெக்சர் மற்றும் 100kWh-க்கும் அதிகமான பேட்டரி பேக் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எலக்ட்ரிக் கார்

எதிர்கால எலக்ட்ரிக் M3 காரின் முன்னோட்டமாக மாறுமா?

இந்த கான்செப்ட் கார் நேரடியாக அப்படியே விற்பனைக்கு வராவிட்டாலும், பிஎம்டபிள்யூவின் புகழ்பெற்ற M3 செடான் காரின் அடுத்த தலைமுறை மின்சார பதிப்பிற்கு இதுவே அடிப்படையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் காப்புரிமை பெறப்பட்டிருந்தாலும், உற்பத்தி மாடலின் வெளியீட்டுத் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இருப்பினும், 2027 ஆம் ஆண்டில் உலகளவில் உற்பத்தியாகும் போது, இந்தியாவிலும் இந்த அதிவேக எலக்ட்ரிக் M கார் களம் இறங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

ADVERTISEMENT