இந்தியாவில் புதிய 'X3 M40i' எஸ்யூவியை வெளியிட்டுள்ளது BMW!
செய்தி முன்னோட்டம்
X3 எஸ்யூவி மாடலின் பெர்ஃபாமன்ஸை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட X3 M40i எஸ்யூவியை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ.
பிஎம்டபிள்யூவின் M340i செடானில் பயன்படுத்திய இன்ஜினையே இந்த புதிய M40i எஸ்யூவியிலும் பயன்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.
இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே நடைபெற்று வரும் நிலையில், இதனை CBU (Completely Built Unit) இந்தியாவில் விற்பனை செய்யவிருக்கிறது பிஎம்டபிள்யூ. முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் ரூ.5 லட்சம் கொடுத்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த M40i-யில் M ஸ்போர்ட்ஸ் பேக்கேஜை ஸ்டாண்டர்டாகக் கொடுத்திருக்கிறது பிஎம்டபிள்யூ. எனவே, இதன் ஸ்டீயரிங் வீல், சீட்பெல்ட் மற்றும் பாட்டம் என அனைத்து இடங்களிலும் M ஸ்பெசிபிக் ட்ரீட்மென்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
பிஎம்டபிள்யூ
இன்ஜின் மற்றும் பிற வசதிகள்:
360hp பவர் மற்றும் 500Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய, 6 சிலிண்டர்கள் கொண்ட, 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜினைப் பெற்றிருக்கிறது M40i.
M340i செடானில் இருக்கும் இன்ஜினை விட 14hp பவரை குறைவாகவே உற்பத்தி செய்கிறது இந்த இன்ஜின். இந்த இன்ஜினுடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.
0 - 100 கிமீ வேகத்தை 4.6 நொடிகளில் எட்டிப் பிடிக்கும் இந்தக் காரின் அதிகபட்ச வேகம் 260 கிமீ.
இரண்டு 12.3 இன்ச் டிஸ்பிளேக்கள், பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இந்தியாவில் நேரடிப் போட்டியாளர்கள் இல்லாத இந்த மாடலை ரூ.86.50 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ.