பைக்-ஐ வாட்டர் வாஷ் செய்யும் போது இதையெல்லாம் கட்டாயம் செய்யுங்கள்
வாகனப் பராமரிப்பு மிகவும் அவசியம். கார் மட்டுமல்ல, பைக்கையும் பராமரிக்க வேண்டும். அவ்வப்போது துடைத்து, வாட்டர் வாஷ் செய்வது மிகவும் அவசியம். அப்படி செய்யும் போது, சில விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டியதும் அவசியம். பைக்கின் என்ஜின் சூடாக இருக்கும்போது, தண்ணீர் ஊற்ற கூடாது. மீறினால், என்ஜின் பழுதடைய நேரிடும். வெப்பநிலையில் ஏற்படும் திடீர் மாற்றம் என்ஜினை பாதிக்கும். கிளீனிங் சாதனங்களை அருகேயே வைத்திருங்கள். சுத்தம் செய்ய தேவைப்படும், பக்கெட், சுத்தமான துணி, பிரஷ், கிளீனர் போன்றவற்றை கைக்கெட்டும் தூரத்திலேயே வைக்கவும். பைக் சுத்தம் செய்ய, துணி சலவை செய்யும் டிடெர்ஜெண்டை பயன்படுத்த கூடாது. அதற்கென்று ப்ரத்யேகமான பவுடர்-ஐ கடைகளில் வாங்கி பயன்படுத்தவும். காரணம், துணிக்கான டிடெர்ஜெண்டில் உள்ள கெமிக்கல்கள், உங்கள் பைக்கை பாழாக்கிவிடும்.
வாட்டர் வாஷ் செய்த பின் என்ன செய்ய வேண்டும்
அலுமினியம் ராட் மற்றும் கண்ணாடியை சுத்தம் செய்ய, பிரத்யேகமான மெல்லிய, மிருதுவான துணியினை பயன்படுத்தவும். இதனால், பைக்கில் கீறல் விழாது. பைக்கின் மற்ற பாகங்களை துடைக்க, ஸ்பான்ஜ்-ஐ பயன்படுத்துவது நல்லது. இதன் மூலம், தண்ணீரை வேகமாக உறிஞ்சி எடுத்துவிடலாம். வாட்டர் வாஷ் செய்ததும், நீண்ட நேரம் பைக்-ஐ ஈரமாக விட வேண்டாம். முடிந்த வரை ஈரத்தை துடைத்து எடுக்கவும். சீக்கிரம் காய வைக்க, வெயிலில் நிறுத்தி வைக்க கூடாது. இதுவும் உங்கள் பைக் நிறத்தை மங்க செய்து விடும். தேவையான இடத்தில், வினைல் ப்ரொடக்டர், வாக்ஸ் ப்ரொடக்டர் இடவும். மேலும் வண்டியின் பாரிங்களுக்கு, அதற்குரிய ப்ரொடக்டர் ஸ்பிரே உபயோகிக்கவும். இதனால் கடினமான தூசு, உங்கள் பாரிங்கில் சீக்கிரத்தில் அண்டாது.