ஐந்து சிறந்த குளிர்கால கார் பராமரிப்பு குறிப்புகள்
செய்தி முன்னோட்டம்
வாகன பராமரிப்பு மிக அவசியம். குறிப்பாக மழை மாற்றும் குளிர் காலங்களில், உங்கள் காரை நன்கு பராமரிக்க வேண்டும். இல்லையெனில், அது பல விபத்துகளை உண்டாக்க நேரிடும். இதை தவிர்க்க:
கார் சர்வீஸ்: குறிப்பிட்ட கால இடைவேளையில் கார்-ஐ சர்வீஸ் செய்ய வேண்டும். அது எந்த காலமாக இருந்தாலும். காரின் உதிரிபாகங்கள் சேதமடைந்து இருந்தால், காலம் தாழ்த்தாமல் அதை மாற்ற வேண்டும்.
பிரேக்: உங்கள் வாகனத்தின் பிரேக்கிங் சிஸ்டம் சரியாக இருக்கிறதா என்று, வண்டி எடுக்கும் முன்னர் பரிசோதிப்பது அவசியம். மூடுபடி நிறைந்த சாலையில் செல்லும் போது, பிரேக் சரியாக இருப்பது முக்கியம். எனவே, பிரேக் பேட்கள் முற்றிலும் தேய்ந்து போவதற்கு முன்பு அவற்றைப் பரிசோதித்து மாற்றவும். பிரேக் காலிப்பர்களை கிரீஸ் செய்யவும்.
மேலும் படிக்க
குளிர்கால கார் பராமரிப்பு குறிப்புகள்
டயர்: உங்கள் வாகனத்தின் டயர், நீங்கள் வசிக்கும் இடத்திற்கும், உங்கள் வாகனத்திருக்கும், ஏற்றதாக இருக்க வேண்டும். மலை பிரதேசத்தில் வாழ்பவர்கள், அதற்கு தகுந்தாற்போல் டயர்களை பொறுத்த வேண்டும். அதன் தேய்மானத்தையும் அடிக்கடி பரிசோதித்து, தேவைப்பட்டால் மாற்றவும்.
பேட்டரி: மழை காலங்களிலும்,குளிர் காலங்களிலும், வாகனத்தின் பேட்டரி அடிக்கடி பாதிக்கப்படும். குளிர்காலம் வருவதற்கு முன், காலாவதியான பேட்டரியை மாற்றவும்.மேலும் கார் ஓடுவதற்கு தேவையான அனைத்து வயர்களையும் அடிக்கடி பரிசோதிக்கவும்.
சுத்தம்: வாகனத்தின் வெளிப்புறமும், உட்புறமும் சுத்தமாக வைத்திருத்தல் அவசியம். குறிப்பாக, விண்ட்ஸ்கிரீன், பக்கவாட்டு கண்ணாடிகள், மற்றும் அனைத்து விளக்குகளையும், வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தி துடைக்கவும்.