அட்வென்சர் ரக மாடலில் வெளிவரப்போகும் எலெக்ட்ரிக் பைக்! விலை இவ்வளவு குறைவா?
பிரபல இருசக்கர மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான பேட் ஆர்இ(BattRE Dune) விரைவில் புதிய எலெக்ட்ரிக் பைக் ஒன்றை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த புதிய எலெக்ட்ரிக் பைக் இந்திய சந்தையில், அட்வென்சர் ரக பைக் மாடல் ரகத்தில் தயார் செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, மிகக் குறைவான விலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பதாக கூறப்படுகின்றது. அப்படி லீக் ஆன தகவலின் படி ஒரு லட்ச ரூபாய் அல்லது அதற்கும் குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையில் பேட்ஆர்இ நிறுவனத்தின் அட்வென்சர் எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பதாக தெரிவிக்கின்றன. இது பற்றிய எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை என்றாலும், சில வாரங்களில் வெளிவரலாம் எனக்கூறப்படுகிறது.
அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவரும் BattRE Dune எலெக்ட்ரிக் பைக்
இந்த பைக்கில் ஓர் முழு சார்ஜில் 130 கிமீ பயணிக்கும் திறனுடன் விற்பனைக்குக் கொண்டு வரப்பட உள்ளது. மூன்று விதமான ரைடிங் மோட்கள் எலெக்ட்ரிக் பைக்கில் வழங்கப்பட உள்ளன. ஈகோ, கம்ஃபோர்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய மோட்களே அவை ஆகும். இந்த மோடில் தான் அதிக ரேஞ்ஜை தரக் கூடியதாக ஈக்கோ இருக்கின்றது. அதிகபட்சமாக 100 கிமீ தூரம் வரை மட்டுமே ஸ்போர்ட்ஸ் மோடில் பயணிக்க முடியும் என கூறப்படுகிறது. மேலும், முழு டிஜிட்டல் தர இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் செல்போன் இணைப்பு ஆகியவை வழங்கப்படலாம். இன்னும் பல்வேறு சிறப்பு வசதிகளைக் கொண்ட வாகனமாகவே டூன் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது.