ரயில் தண்டவாளத்திற்கு இடையே இருக்கும் இந்த பெட்டி எதற்கு தெரியுமா?
இரயில் பயணம் என்பது ஒரு பாதுகாப்பான பயணம் எனவும், பல கோடி மக்கள் பயணிக்கிறார்கள். பயணிகளின் உயிர்களை காக்க ரயில்வே நிர்வாகம் பல வசதிகளையும் வைத்துள்ளது. இதனிடையே, இப்பதிவில் ரயில்வே பயணித்தின்போது, ரயில் பாதைகளில் ஆங்காங்கே குட்டி பீரோ மாதிரி ஒரு அலுமினிய நிறத்தில் பெட்டி ஒன்று இருக்கும். அதனை பலரும் கண்டு இருப்பார்கள் ஆனால் என்ன என்பது பற்றி யாருக்கும் அதிகம் தெரிந்து இருக்காது. அவை என்ன என்பதை பார்ப்போம். இந்த பெட்டி ரயில் பயணிகளின் உயிரை காப்பாற்றும் பெட்டியாகும். இந்த அலுமினிய நிற பெட்டிக்கு ஆக்ஸில் பாக்ஸ் கவுண்டர் என்று பொருள். இந்த ஆக்ஸில் பாக்ஸ்கள் ரயில் பாதையில் ஒவ்வொரு 3 அல்லது 5 கி.மீக்கு ஒன்று பொருத்தப்பட்டிருக்கும்.
தண்டவாளத்திற்கு இடையே இருக்கும் இந்த பெட்டியின் வேலை என்ன?
இவை, ரயில் பெட்டிகளை எண்ணுவது தான். எத்தனை ரயில் பெட்டி உள்ளது என எண்ணும். தொடர்ந்து பெட்டிகளுடன் செல்கிறதா? இடையில் ஏதாவது பெட்டி கழன்று விடுகிறதா என்பதைக் கண்காணிக்கும் கருவிதான் இது. இதில் இருந்து ஒரு வயர் தண்டாவளாத்தின் இடையே பொருத்தப்பட்டிருக்கும். ரயில் அந்த வழியாகச் செல்லும் போது ரயில் சக்கரம் அதில் அழுத்தி அந்த கருவி அமுங்கும். அப்போது இவை கணக்கெடுக்கும். ஏதாவது அசாம்பாவிதம் ஏற்பட்டால் இவை கண்ட்ரோல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கும். ன்ஜினியர்கள் ஒவ்வொரு இடத்தின் தன்மை மற்றும் தேவையைப் பொருத்து இந்த ஆக்ஸில் கவுண்டர் பெட்டியைப் பொருத்தியுள்ளனர். இதற்காக தான் இவை பெரிதும் பயன்படுகிறது.