Page Loader
ஓலா ஏத்தர் நிறுவனத்தை காலி செய்ய வரும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! வெளியீடு எப்போது?
அவன்டோஸ் எனர்ஜியின் அட்டகாசமான 4 எலக்ட்ரிக் வாகனங்கள் வெளியீடு

ஓலா ஏத்தர் நிறுவனத்தை காலி செய்ய வரும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! வெளியீடு எப்போது?

எழுதியவர் Siranjeevi
Mar 15, 2023
05:57 pm

செய்தி முன்னோட்டம்

பெட்ரோல் வாகனத்தை எந்த அளவிற்கு மக்கள் வாங்க ஆர்வம் காட்டுகிறார்களே அதைவிட பல மடங்கு எலக்ட்ரிக் வாகனம் வாங்கம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில், முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தூக்கி சாப்பிட அவன்டோஸ் எனர்ஜி புதிய மின் வாகன நிறுவனம் இந்தியாவில் 4 எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. இந்த 4 எலக்ட்ரிக் வாகனங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக விற்பனை செய்ய உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக டீசர் படங்களையும் வெளியிட்டு இருக்கிறது. அவன்டோஸ் எனர்ஜி, சென்னையைச் சேர்ந்த இந்த புதுமுக மின்வாகன உற்பத்தி நிறுவனமே விரைவில் இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்கள்

அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவரும் அவன்டோஸ் எனர்ஜி எலக்ட்ரிக் வாகனங்கள்

அந்த மாடல்களான எஸ் 110 (S110), எஸ் 125 (S125), எம்125 (M125) மற்றும் எம்150 (M150) ஆகிய மாடல்களையே நிறுவனம் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இந்த வாகனங்கள் முன்னணி ஸ்கூட்டர்களான ஓலா, ஏத்தர் நிறுவனங்களுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது. மேலும், ஸ்டைலான மற்றும் பன்முக பயன்பாட்டு வசதிக் கொண்ட இருசக்கர வாகனங்களாகவே நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. தொடர்ந்து, இதன் மின்சார பைக்குகள் பற்றிய எந்த விபரங்களும் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், தற்போது வெளியாகி இருக்கும் நிழற்படங்கள் வாயிலாக இரு எலக்ட்ரிக் பைக்குகளும் சர்வதேச ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு இணையான ஸ்டைலில் உருவாக்கப்பட்டு உள்ளது.