எலக்ட்ரிக் வாகனங்களை இப்படி சார்ஜ் செய்தால் பேட்டரி ஆயுள் நீடிக்கும்!
இந்தியாவில் பெட்ரோல் வாகனங்களை விட எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மவுசு அதிகரித்துவிட்டது. ஆனால், எலக்ட்ரிக் வாகனங்களில் இன்றளவும் நிறைய பிரச்சினைகள் உள்ளது என வாடிக்கையாளர்கள் புகார் அளிக்கின்றனர். அதே போல் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கிய சிலர் வாகனம் வாங்கிய புதிதில் அதிக ரேஞ்ச் கிடைத்தது. தற்போது ரேஞ்ச் குறைந்துவிட்டது எனக் குற்றம்சாட்டி வருகின்றனர். இப்படியான பிரச்சினைக்கு என்ன காரணம் என தெரிந்துகொள்ளலாம். எலக்ட்ரிக் வாகனங்களில் லித்தியம் அயான் பேட்டரிகள் தான் பயன்படுத்தப்படுகிறது. கிராஃபைட் ஆனோடாகவும், லித்தியம் கேத்தோடாகவும் பாசிடிவ் மற்றும் நெகடிவ் எலக்ட்ரோடுகளாக செயல்படும். இதை, எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்யும் போது எலக்ட்ரான் கேத்தோடிலிருந்து ஆனோடிற்கு மின் சக்தியைக் கடத்தி செல்லும்.
எலக்ட்ரிக் வாகனத்தின் பேட்டரி ஆயுள் நீட்டிக்க என்ன செய்யலாம்?
பின், ஆனோடிலிருந்து கேத்தோடிற்கு மின் சக்தியைக் கொண்டு வருவது மூலம் பேட்டரியிலிருந்து சார்ஜ் வெளியேறும். இதன்மூலம் தான் மின்சார வாகனத்தை இயக்கமுடியும். இந்நிலையில், எலக்ட்ரிக் வாகனத்தை சார்ஜ் போடும் போது பலர் 100% வரை பேட்டரியை சார்ஜ் செய்கிறார்கள். ஆனால், பேட்டரியை அதன் அளவை விட அதிக நேரம் சார்ஜ் ஏறினால் கேத்தோடு மற்றும் ஆனோடு பகுதியில் உள்ள ஆக்டிவ் மெட்டிரியலின் அளவு குறையும். இதனால் நாளடைவில் பேட்டரியிலிருந்து வெளியேறும் மின்சக்தியின் அளவு குறையும். ஆனால், எப்பொழுதும் லித்தியம் அயான் பேட்டரியை 80 சதவீதத்திற்கு மேல் சார்ஜ் போடாமலும், அதே நேரம் 20 சதவீத்திற்கு கீழ் சார்ஜ் வராத அளவிலும் மெயின்டெயின் செய்தால் நீண்ட நாட்கள் பேட்டரி உழைக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.